Tamil Thirukural

Tuesday, December 29, 2009

தமிழா!நீ பேசுவது தமிழா?

கடவுளை மற !

மனிதனை நினை !!!
.......... ....
தந்தை பெரியார்

அடங்க மாறு,,
அத்து மீறு ,
திமிரி எழு,
திருப்பி அடி .....

சீறி எழ நாளை பழி தீர்திடும் உன் வீரத் தழும்பு ...

சாதியும்,சாதிஇன் இழிவையும் ..
துடைத்தெரிய போராடாமல் ,
இருப்பதை விட .......
செத்து ஒழிவதே மேலானது ...
புரட்சியாளர் ---டாக்டர் அம்பேத்கர் ........


ஈழத்திலே ஒரு தலைவன் ,
தமிழகத்திலே ஒரு தலைவன் ,
இருவருமே ஒருவனடா
மானமுள்ள தமிழனடா ....
--
பாவலர் - அறிவுமதி

தமிழா!நீ பேசுவது தமிழா?
-----------------------------------
தமிழா!நீ பேசுவது தமிழா?

அன்னையைத் தமிழ்வாயால்'மம்மி' என்றழைத்தாய்...
அழகுக் குழந்தையை'பேபி' என்றழைத்தாய்...
என்னடா, தந்தையை 'டாடி' என்றழைத்தாய்...
இன்னுயிர்த் தமிழைகொன்று தொலைத்தாய்...


தமிழா!நீபேசுவது தமிழா?


உறவை 'லவ்' என்றாய்உதவாத சேர்க்கை...
'
ஒய்ப்' என்றாய் மனைவியைபார் உன்றன் போக்கை...
இரவை 'நைட்' என்றாய்விடியாதுன்வாழ்க்கை
இனிப்பை 'ஸ்வீட்' என்றாய்அறுத்தெறி நாக்கை...


தமிழா!நீ பேசுவது தமிழா?


வண்டிக்காரன் கேட்டான்'லெப்ட்டா? ரைட்டா?
'
வழக்கறிஞன் கேட்டான்என்ன தம்பி 'பைட்டா?
'
துண்டுக்காரன் கேட்டான்கூட்டம் 'லேட்டா?
'
தொலையாதா தமிழ் இப்படிக் கேட்டா?


தமிழா!நீ பேசுவது தமிழா?


கொண்ட நண்பனை'பிரண்டு' என்பதா?
கோலத் தமிழ்மொழியைஆங்கிலம் தின்பதா?
கண்டவனை எல்லாம்'சார்' என்று சொல்வதா?
கண்முன் உன் தாய்மொழிசாவது நல்லதா?


தமிழா!நீ பேசுவது தமிழா?


பாட்டன் கையில'வாக்கிங் ஸ்டிக்கா
'
பாட்டி உதட்டுலஎன்ன 'லிப்ஸ்டிக்கா?
'
வீட்டில பெண்ணின்தலையில் 'ரிப்பனா?
'
வெள்ளைக்காரன்தான்உனக்கு அப்பனா?


தமிழா!நீ பேசுவது தமிழா?


-
உணர்ச்சிக் கவிஞர் காசி ஆனந்தன்


வேதனையின் விண்ணப்பம்
-------------------------------------
யோவ் கடவுள் நீ இருப்பது உண்மையென்றால்
என் தமிழ் இன சகோதரர்களை காப்பாற்டு ... இல்லையேல்
நீ ஓர் அழுகிய வெறும் காற்று .......


சிந்தனை செய் மனமே சீக்கிரம் என் கனவுகள் மெய் பட
-----------------------------------------------------------------
திசைகள் அற்ட என் வாழ்வில்
எங்கே போனது என் இனிமையான சுகங்களும் ,சுவாரியசங்களும்
தேடுகிறேன் இமைகள் அற்று ....
வாய் விட்டு சிரித்தால் நோய் விட்டு போகுமாம்
ம்ம்ம்ம் நானும் சிரித்தேன் என் மனசாட்சியை விற்று ---
எனை விட்டு செல்லவில்லை
தொர்டிக்கொண்டது மன வலியாக .....

நிறந்தரம்
------------
நேற்று என்பது உடைந்த பானை
நாளை என்பது மதில் மேல் பூனை
இன்று மட்டுமே உன் கையில் கிடைத்த வீணை .............


செயல்படுவதற்கு முன் சிந்தனை செய் ....
செய்து விட்டு சிந்திக்காதே ......இனிதே கிடைக்கும் இன்பத்தை விட ..
போறாடி தோற்கும் வலி திடமானது .......


வெற்றி என்பது எளிதல்ல ..
தோல்வி என்பது நிலையல்ல .....


போதை அற்று வாழ் .. ஆனால்
பேதை அற்று வாழதே ................நிலையான நட்பு
-------------------
முகம் பார்க்காமல் முதல் அறிமுகம்
வார்த்தைகளில் தொடங்கி வருடங்கள் பல கடந்து வளர்பிறையை ...
முகவரிதெரியாமல் முழு நிலவாய் ...
அகம் அரியது உன்னிடம் இனம் புரியாத நட்பு ...
எண்ணங்கள் நினைவுகளில் இடும் அலங்காரம் ...
இனிய நாட்கள் இன்ப ஓளி வீசி மலர்ந்து சிரிக்கும் ...
நெருடல்கள் இல்லாது வணங்கி கொண்டு ...
நெஞ்சை வருடி நெகிழ்வு தந்தது வுனது நட்பு ...
இடங்கள் பல மாறியது வுண்டு ...
தொடர்ந்து வரும் பிறவிகள் போன்றே இணைந்தும் வந்ததுண்டு...
அன்பே உருவான இனிய இதயத்தோடு ...
முதுமை வரைக்கும் வருமோ இளமை மாற நட்பு ...
கண்டதும் உயீரின் கற்பனை மறைந்து விடும் ...
கொண்ட நட்பினால் உள்ளம் அளவில்லா மகிழ்ச்சிகொள்ளும் ...
எல்லைதனை வகுத்து புரிந்து கொண்டல் ...
குறை இன்றி நெறியோடு நீண்ட நாள் வாழ்ந்திடும் நிலையான நட்பு .....

உணர்வுகள்
-----------------
உயிரை இழந்தோம்
உடலை இழந்தோம்
உணர்வை இழக்கலமா ?

உணர்வைகொடுத்து..
உயிராய் வளர்த்த
கனவை மறக்கலாமா ?..

தோல்வி நிலையென நீ நினைத்தால்
மனிதன் வாழ்வை நினைக்கலாமா ?..

யுட்தங்கள் தோன்றட்டும் ..
ரத்தங்கள் சிந்தட்டும்
பாதை மாறலாமா ?...
ரத்தத்தில் ரத்தத்தில் அட்சங்கள் வேகட்டும் ..
கொள்கை மாறலாமா ?

உடல் முழுவதும் வீரம்
பின் ஏன் கண்ணின் ஓரம் ஈரம் ...

விடியலுக்கு இல்லை தூரம்
இனியும் மனதில் ஏன் பாரம் ..........................

வாசிக்க கிடைக்காத வரலாருகளைத் தின்று செரித்து ..
நின்று சிரிக்கும் நிஜம் ......

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...