Tamil Thirukural

Saturday, October 23, 2010

தமிழன் முன்னேற்றப் பாதையில் அடியெடுத்து வைக்க வேண்டும்.


சினிமா மாயையில் மூழ்கிக்கிடக்கும் எண்ணற்ற 
இளைஞர்களை  ஊது குழலாக பெலிக்ஸ் தெரிவித்த கருத்துக்களுக்கு சரியானதொரு பதிலளித்திருக்கிறீர்கள்.

ஏற்கனவே சினிமா மோகத்தில் சுய நினைவை இழந்து கொண்டிருக்கும் 
இளைஞர்களை  சன் பிக்சர்ஸ் பித்தர்களாக மாற்றி பணம் பிடுங்க தொழில் செய்து கொண்டிருக்கிறார்கள். 
150 கோடி முதலீடு செய்யும் அளவிற்கு இதில் ஒரு சுக்கும் கிடையாது. இந்த முதலீட்டை வேறு ஏதாவது நல்ல திட்டங்களில் போட்டிருக்கலாம்.

தமிழனின் அறியாமையை பயன்படுத்தி. எதற்கும் லாயக்கில்லாத நடிகைகள் கோடி கொடியாக சுரண்டிக் கொண்டிருக்கின்றனர்.
 

ஒரு பத்திரிகை தகவலைப் படித்த போது பேரதிர்ச்சியாக இருந்தது.
 
நயன்தாராவின் சம்பளம் - 1 கோடி
தமன்னாவின் சம்பளம்    - 1 கோடி

தமிழ்நாட்டில் மிகச்சிறந்த இயற்கை விஞ்ஞானி நம்மாழ்வார் அவர் கூட இவ்வளவு பணம் சம்பளம் வாங்கியிருக்க மாட்டார்.
 

தமன்னாவும் நயன்தாராவும் இந்த சமுதாய முன்னேற்றத்திற்கு என்ன கிழித்துவிட்டார்கள். அறியாமை தமிழனின் அப்பாவித்தனத்தை உபயோகப்படுத்தி செல்வம் கொழிக்கிறார்கள், இந்த நிலைமை மாற வேண்டும்.
 

சினிமா வெறியை விட்டு விட்டு தமிழன் முன்னேற்றப் பாதையில் அடியெடுத்து வைக்க வேண்டும்.
 

நன்றி.
 

1 comment:

Related Posts Plugin for WordPress, Blogger...

Blog Archive