Tamil Thirukural

Friday, October 22, 2010

Online free Sms Love letter,Poem

 
ஒரு குறுஞ்செய்தியில் விளையாட்டாய்
ஆரம்பித்தது நம் பயணம்.
உனது பெயரைக் கண்டுபிடிப்பதற்கு
18 எஸ்.எம்.எஸ்களை செலவிட்டேன்!

சிரித்துக் கொண்டே
 
உன் பெயரைச் சொன்னாய்
ஊரைச் சொன்னாய்
என் விவரங்கள் கேட்டாய்!

உன் குரலில் ஒலித்த தோழமை
 
என் நெஞ்சை ஆட்கொண்டது.
அடிக்கடி தொடர்பு கொள்ள ஆரம்பித்தாய்
ரசித்துப் பேச ஆரம்பித்தாய்!

பழக்கம் நல்ல நட்பாய் மாறியது
 
ஏனோ தெரியவில்லை
இந்த நட்பை எனக்கு
இழக்க மனம் வரவில்லை!

என் எழுத்தில் இருந்த ஈர்ப்பு
 
உனது கவிதைகள், என் உன் வேலைகள்
பகிர்ந்து கொண்டோம் அனைத்தையும்
நல்ல தோழமையாய்!

ஆனபோதிலும் உன்
 
சிறுபிள்ளைத்தனமான சில செயல்கள்
என்னை எரிச்சலில் ஆழ்த்தியது.
கடிந்து கொண்டேன்!

இரண்டு நாட்களுக்குப் பின்
 
குறுஞ்செய்திகள் நான் அனுப்ப
பதில் இல்லை உன்னிடமிருந்து
மனசு சற்றே தடதடத்தது!

தோழி!
 
“எனக்குக் கோபம் போயிடுச்சு
உங்களுக்கு வந்துடுச்சா” என்றேன்
நட்பென்றாலும் அழைப்பில் மரியாதை!

என் இளகிய மனது
 
உன் வருகைக்கு ஏங்கியது
நீயும் வந்தாய்
புது மலர்ச்சியுடன்!

உன் உள்ளுக்குள்
 
உன் இதயத்திற்குள்
உன் மன ஆழத்திற்குள்
எனக்கு சிம்மாசனம் இடப்பட்டு விட்டதை அறியாமல்!

அரும்பி விட்ட காதல் மொட்டாய்
 
எனை உணர்ந்தாய்; எனை உன்னவன்
என்று கட்டமும் மனதிற்குள் கட்டிக்கொண்டாய்!

நீதான் என் காதலன், என் மனங்கவர்ந்தவன்
 
ஒருவரைப் பிடித்துப்போய் விட்டால்
ஜென்மத்திற்கும் அவரை வெறுப்பதில்லை
என்பது உன் திட முடிவு!

இதுவரை எந்தப் பெண்ணையும்
 
காதலாய் நோக்கியிராத
என் கண்கள் உன் மனதைப்
படித்துப் பார்த்தது!

நமக்குள் ஓர் உலகம் உருவானது
 
இத்தனைக்கும்
நீ என்னைப் பார்த்ததில்லை
நான் உன்னைப் பார்த்ததில்லை!

பழக்கம் நட்பாய் வளர்ந்து
 
நட்பு தோழமையாய் நெருங்கி
தோழமை காதலாய் கசிந்துருகி
காதல் பரிசுத்தமான உணர்வாய் உருப்பெற்றது!

துக்கம், சந்தோஷம், இன்பம், துன்பம்
 
மூச்சு, செய்கை, கேட்டல், படித்தல்
போன்ற பல உணர்வுகளைப் போல
நானும் உனக்கொரு உணர்வு என்றாய்!

என்னை மட்டுமே உணர,  

நுகர விரும்புகிறேன் என்றாய்
எனக்குள் சிலிர்ப்பு தவிப்பு வேறு!
எனக்குள் நானே தொலைந்தேன்
தேடினேன் தேடினேன் தேடிக் கொண்டே இருக்கிறேன்

இன்று!

காலனின் கரங்களுக்கு உனை இரையாக்கிவிட்டு
காலத்தின் கரங்களுக்குள் சிக்கிவிட்ட பாவியாகி நிற்கிறேன்
பாந்தமாய் வளர்ந்தவள் பரமபதத்தை அடைந்திருக்க
பாசமாய் வளர்ந்தவன் பாவியாகி நிற்கிறேன்
 


No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...

Blog Archive