Tamil Thirukural

Thursday, October 28, 2010

ரஜினி Vs கே.பி.


கே.பி.: நான் டைரக்ட் பண்ணும்போது இவர்கிட்டே வந்து ஏண்டா மாட்டிக்கிட்டோம்னு நினைச்சதுண்டா?
ரஜினி : நிறைய வாட்டி…. நிறைய வாட்டி….
கே.பி.: நிறைய வாட்டியா? நான் உன்னை வெச்சு மூணு… இல்லே நாலஞ்சு படம் தான் பண்ணியிருக்கேன். ஆன உன்னை வெச்சு ஒரு ‘தில்லு முள்ளு’ பண்ணினேனே அதை என்னால மறக்க முடியாது… நீ கூட கேட்டே… தில்லுமுல்லு என்னால பண்ண முடியுமான்னு… அது காமெடி படமாச்சே… என்னால பண்ண முடியுமான்னு கேட்டே… நாகேஷ் மாதிரி ஹீரோக்கள் பண்ண வேண்டிய படம் நான் எப்படி சார் பண்றதுன்னு கேட்டே… நான் சொன்னேன்… “உனக்கு காமெடி நல்லா வரும். நீயே பண்ணு. வரலேன்னாலும் நான் பாத்துக்குறேன்னு சொன்னேன். அதுக்குப் பிறகு தான் ஒத்துக்கிட்டே… ஞாபகம் இருக்கா?
ரஜினி : ஆமா… நான் காமெடி ரோல் பண்றதான்னு தயங்கினேன்…
கே.பி: ஆமா… அதுகூட உனக்கு வேறொரு தயக்கம் கூட இருந்தது…. அதாவது அந்த படத்துக்காக மீசை எடுக்கணும்ன்னு நீ தயங்கினே…
கே.பி: அப்புறம் எப்பவாவது உன்னை பத்தி நினைக்கும்போது எனக்கு இது ஞாபகத்துக்கு வரும். ‘அவர்கள்’ படத்தைப்போ நான் உன்னை திட்டிநேனே, அது ஞாபகம் இருக்கா?
ரஜினி : நல்லா ஞாபகம் இருக்கு… நல்லா ஞாபகம் இருக்கு.
கே.பி: அன்னைக்கி கன்னாபின்னான்னு திட்டிட்டு கோவிச்சிக்கிட்டு போய்ட்டேன் நான். அப்புறமா வந்து எத்தனையோ தடவை நினைச்சி பார்த்து வருத்தப்பட்டிருக்கேன். அதுவும் ஒவ்வொரு முறையும் நீ பெரிய ஸ்டாரா வளரும்போது, இப்படி திட்டிட்டனே உன்னை முண்டம்னு என்னை நானே திட்டிக்குவேன். இப்படி திட்டினியே  இன்னிக்கி எப்படி இருக்காரு அவருன்னு என்னை நானே நொந்துக்குவேன்.
கே.பி : படத்துல எல்லாம் இவ்வளவு ஸ்டைல் பன்றியே… சின்ன வயசுல ஓவரா பண்ணியிருப்பியே… கண்டக்டரா இருந்தப்போ யாரையாவது லவ் பண்ணியிருக்கியா? (நீண்ட கைத்தட்டல், விசில்).
ரஜினி : பண்ணியிருக்கேன். (நீண்ட கைத்தட்டல், விசில்).
கே.பி : யாருன்னு என்கிட்டே மட்டும் அப்புறம் சொல்லு….(கைத்தட்டல், விசில்).
ரஜினி : கண்டிப்பா….
continued….
கே.பி. : எந்திரன் படம் மிகப் பெரிய படம். அந்த மாதிரி இன்னொரு படம் எடுக்க முடியுமா என்பது டவுட் தான். அதுல உன்னோட பெர்பார்மன்ஸ் HATS OFF. (ரஜினி உடனே தேங்க்யூ என்கிறார்)  அப்படி பண்ணியிருக்கே நீ… ஒரு டைரக்டரா ஷங்கர் வந்து அத்துணை அற்புதமா உன்னை வேலை வாங்கியிருக்கிறார். ஆனா இந்த எந்திரன் படம் உன்னோட அல்டிமேட்டுன்னு நீ நினைக்கிறியா?
ரஜினி : இல்லை. (கைதட்டல்… விசில் சத்தம்)
கே.பி.: வெரி குட். கை கொடு ….(தலைவருடன் கைகுலுக்குகிறார்)
continued….
கே.பி: எந்திரன் படத்தை தியேட்டர்ல போய் ரெண்டு தடவை பார்த்தேன். (கைதட்டல்… விசில் சத்தம்) முதல் தடவை, ரஜினி ரசிகனா… ரெண்டாவது தடவை டைரக்டர் ஷங்கருக்காக. ஒரு படத்தை ரெண்டாவது தடவை நான் பார்த்தது எந்திரன் தான். (மீண்டும் கைதட்டல்… விசில் சத்தம்).
ரஜினி : ரொம்ப நன்றி சார்.
கே.பி. : சந்திரலேகாவுக்கு பிறகு.. எந்திரனை தான் ரெண்டாவது தடவை பார்த்தேன்.
ரஜினி : யுவர் ஹானர் சார்…
கே.பி: நீ எப்போவாவது என் படத்தை ரெண்டாவது தடவை பார்த்திருக்கியா?
ரஜினி: நிறைய பார்த்திருக்கேன்…
கே.பி : (நம்ப மறுத்து) என்ன படம்…? எத்தினி தடவை…? நிஜமா சொல்லணும்…
ரஜினி : சர்வர் சுந்தரம், நீர்க்குமிழிகள், அபூர்வ ராகங்கள், அவர்கள்… அவர்கள் படத்தை எட்டு தடவை பார்த்திருக்கேன். அரங்கேற்றம் பன்னிரண்டு முறை…. பார்த்திருக்கேன்.
கே.பி.: ஆடியன்சை பார்த்து… நம்பலாமா இவரை… இவர் சொல்றதை நம்பலாமா? என்று நகைச்சுவையாக கேட்கிறார். (கூட்டத்தில் சிரிப்பொலி).
கே.பி. : பொண்ணுங்க ரெண்டு பேருக்கும் நல்லபடியா கல்யாணம் பண்ணிட்டே. எந்திரன் சூப்பர் ஹிட்டாயிடுச்சு… உன்னோட அடுத்த டென்ஷன் என்ன? கவலை ஏதாவது இருக்கா?
ரஜினி : படம் ஒத்துக்கத வரைக்கும் எந்த கவலையும் இல்லே. படம் ஒத்துகிட்டா அடுத்த நிமிஷம் கவலை வந்துடும்.
கே.பி: அது சரி… கவலையே இல்லையேன்னு ஒரு கவலையோன்னு எனக்கு சந்தேகம் வந்துடுச்சு…
continued…

கே.பி: திருமதி லதா அவர்களை என்கிட்டே அழைச்சிகிட்டு வந்து என் கிட்டே அறிமுகப்படுத்தி, இவங்களை தான் நான் கல்யாணம் பண்ணிக்கப்போரேன்னு சொன்னே. ஞாபகம் இருக்கா? எங்கே எப்போ நடந்ததுன்னு சொல்ல முடியுமா?
ரஜினி : கலாகேந்திரா ஆபீஸ்ல. நான் லதாவை கூட்டிகிட்டு வந்து சொன்னேன். இவங்களை தான் கல்யாணம் பண்ணிக்கப்போறேன்னு. “பெரிய இடமாச்சே… பெரிய இடத்தையெல்லாம் எப்படி பகைச்சு இவன்களை கல்யாணம் பண்ணிக்க்போரே? நீ ரொம்ப கோவக்காரனாச்சே… உன்னை எப்படி இவங்க சமாளிக்கிறாங்க? உன்னை எப்படி புரிஞ்சிக்கிறாங்க….? நல்லா FAMILY பா, நல்ல பொண்ணு. அப்படின்னு சொன்னீங்க. அதுக்கப்புறம் லதாவை கூப்பிட்டு “இவன் நல்ல கோவக்காரன் மா. அது மட்டும் பார்த்துக்கோ. ரொம்ப நல்ல பையன்.” அப்படின்னு சொன்னீங்க…
கே.பி: அது உனக்கு ஞாபகம் இருக்கா….? (வியப்புடன்). ஞாபகம் இருக்கு. எனெக்கென்னவோ அது தில்லு முள்ளு ஷூட்டிங் டயம்னு நினைக்கிறேன்.
ரஜினி : ஆமா.. தில்லு முள்ளு ஷூட்டிங் அப்போ தான்.
கே.பி: ஒரு குட்டிக்கதை சொல்ல முடியுமா எனக்காக….? எதைப் பத்தி வேணும்னா இருக்கலாம்..
ரஜினி : சிரிக்கிறார்… இல்ல… நான் ரொம்ப எமொஷனனலா இருக்கேன் இப்போ…
கே.பி: சரி… விடு…
கே.பி: சினிமாத் துறையை தவிர மத்தத துறையில உனக்கு பிடிச்ச சூப்பர் ஸ்டார் யாரு? எந்த துறையில வேணும்னா இருக்கலாம்…. உனக்கு பிடிச்சக் சூப்பர் ஸ்டார் யாரு?
ரஜினி : அரசியல் துறை தானே?
கே.பி : ஹாம்   அரசியல் துறையா கூட இருக்கலாம்….
ரஜினி : லீ குவான் யூ…லீ குவான் யூ… லீ குவான் யூ… (மூன்று முறை சொல்கிறார்) முன்னாள் சிங்கப்பூர் ப்ரைம் மினிஸ்டர் அவர்  (கைதட்டல் விசில்)
கே.பி : தமிழ்ல கவிதை எழுதனும்னு ஆசை வந்திருக்க உனக்கு ?
ரஜினி : நிறைய வந்திருக்கு…
கே.பி : நான் இவர் போல இல்லையேன்னு யாரையாவது பார்த்து ஆதங்கப்பட்டிருக்கியா நீ?
ரஜினி : பட்டிருக்கேன்.
கே.பி : யாரையா பார்த்து ?
ரஜினி : இமயமலையில துறவிகளை பார்த்து ஆதங்கப்பட்டிருக்கேன். இவங்களை மாதிரி நாம இல்லையேன்னு…
கே.பி: எத்துனை தடவை அந்த மாதிரி ஆதங்கப்பட்டிருக்கிறே?
ரஜினி : நிறைய தடவை.. ஒவ்வொரு டயம் ஹிமாலயாஸ் போகும்போதும்…
கே.பி : உனக்குன்னு சின்ன சின்ன ஆசை இருக்குமே? பக்கத்துல யாராவது உட்கார்ந்திருந்தா அவங்க தொடையில கிள்ளுறது… அந்த மாதிரி சின்ன சின்ன ஆசைகள் உன் ப்ரென்ட்கள் கிட்டே வேச்சிகிட்டதுண்டா?
ரஜினி : நிறைய இருக்கு… நிறைய இருக்கு…
கே.பி : ப்ரெண்ட்ஸ்கிட்டே சின்ன சின்ன PRANKS பண்ணணும்னு ஆசை இருக்கு அப்போ?
ரஜினி : நிச்சயமா இருக்கு…

RAPID FIRE ROUND
கே.பி : RAPID FIRE ன்னு சொல்வாங்க… இப்போ அந்த ரவுண்டு.. அதாவது நான் கேட்குற கேள்விகளுக்கு டக் டக்னு பதில் சொல்லணும். ஒத்தை வரில, ஒத்தை வார்த்தைல பதில் சொல்லணும்…  நீ உடனே சொல்லனும்னு அவசியம் இல்லே… கொஞ்சம் டயம் எடுத்துக்கலாம்…
ரஜினி : ஒ.கே. சார்.

கே.பி : ஒரு நாளைக்கு எத்துனை சிகரெட் பிடிக்கிறே? (கூட்டத்தில் சிரிப்பு)
ரஜினி : இப்போ ரொம்ப கம்மி பண்ணிட்டேன்…
கே.பி : ரொம்ப கம்மி பண்ணிட்டே… ஏன் அதை முழுசா கம்மி பண்ணக்கூடாதா? அதை முழுசா விட்டுரேன்… வேணாம்… அது வேண்டாம்…
ரஜினி : விட்டுரேன் சார்…
கே.பி : வேண்டாம் அது. விட்டுடு.. நானே சிகரெட் பிடிச்சவன் தான். என்னை சிகரெட்டும் கையுமா பார்த்தவன் தான் நீ… நான் விட்டுடலே… ஒரு நாளைக்கு எத்துனை பிடிச்சவன் நான் தெரியுமா? நீயும் அதை விட்டுடேன்…
ரஜினி : நிச்சயமா சார்…
(கே.பி.யை நோக்கி குறிக்கிட்டு கே.எஸ். ரவிக்குமார் : அவரை ஸ்டைலா சிகெரட் பிடின்னு சொன்னதே நீங்க தான்.. என்று கூற ஆடியன்ஸ் மத்தியில் பயங்கர சிரிப்பொலி)
கே.பி.: அவரை ஸ்டைலா சிகெரட் பிடின்னு சொன்னதே நான் தான் .. அப்படின்னு ரவிக்குமார் சொல்றாரு… அவர் என் கிட்டே சிகரெட் தூக்கி போட்டு காண்பிச்சாரு… நான் அதை படத்துல யூஸ் பண்ணிக்கிறேன்னு சொன்னேன். அவ்வளவு தான். மத்தபடி புகையை விடுன்னு நான் சொல்லலே… என்று கூறி சமாளித்தார் கே.பி.
கே.பி : பிடிச்ச டைரக்டர் தமிழ்ல யாரு?
ரஜினி : மகேந்திரன் சார். (கைத்தட்டல் விசில்)_
கே.பி : பிடித்த நாவல்?
ரஜினி : பொன்னியின் செல்வன்
கே.பி : வெரி குட்… வெரிகுட் … வெரி குட்…
கே.பி : குடும்பத்தோடு போய் ரசிச்ச ஹாலிடே SPAAT எது  ?
ரஜினி : லண்டன்
கே.பி. : தனியா போய் ரசிச்ச ஹாலிடே ஸ்பாட் எது ? ஹிமாலயாஸ் தவிர… (கூட்டத்தினர் மத்தியில்  பயங்கர சிரிப்பொலி)
ரஜினி : (ஒரு கணம் யோசித்து) நேபால்…
கே.பி : நேபால்? கிட்ட தட்ட ஹிமாலயாஸ் தான் அதுவும்..  (கூட்டத்தினர் மத்தியில்  பயங்கர சிரிப்பொலி)
கே.பி : பிடித்த உணவு ?
ரஜினி : சிக்கன்
கே.பி : சிக்கன் …? என் கிட்டே சொல்றே அதை பத்தி… அதை நான் தோய்த்து கூட பார்த்ததில்லே… நம்ம வெஜிடேரியன்ல ஏதாவது சொன்னா நாம கூட  அதை பாலோ பண்ணலாமேன்னு  பார்த்த்தேன்… ஹூம்.. சிக்கன் ன்னு சொல்லிட்டே…
கே.பி : உன்னோட பெஸ்ட் ப்ரென்ட்?
ரஜினி : ராஜ் பகதூர்
கே.பி : பத்திரிக்கைகள்ல எல்லாம் சொல்வாங்களே… ராஜ் பகதூர் ..  ?
ரஜினி : ஆமா…
கே.பி : குட்… குட்…

கே.பி : உனக்கு பிடிச்ச டிரைவிங் எது? அந்த காலத்துல…
ரஜினி : ஜாவா மோட்டார் பைக்
கே.பி : மிகவும் மகிழ்ச்சியான தருணம்… ?
ரஜினி : கே.பி.சார் எனக்கு மூணு படத்துல கொடுத்த வாய்ப்பு…
கே.பி: மிகவும் வருத்தமான சம்பவம் ?
ரஜினி : எங்கப்பா இறந்த போது
கே.பி : பெரும் மகிழ்ச்சி தந்த பாராட்டு ?
ரஜினி : நீங்க எனக்கு எழுதின லெட்டர். முள்ளும் மலரும் படம் பார்த்துட்டு நீங்க எனக்கு எழுதின லெட்டர். உன்னை அறிமுகப்படுத்தியதற்கு பெருமைப்படுரேன்னு சொல்லி பாராட்டியிருந்தீங்க..
கே.பி : உன்னால் மறக்க முடியாத ஒரு அவமதிப்பு?
ரஜினி : நோ கமெண்ட்ஸ்…
கே.பி : சொல்ல விரும்பலியா ? சரி விட்டுடு…
கே.பி : உனக்கு நிறைவேறாத ஆசை?
ரஜினி : நோ கமெண்ட்ஸ்…
கே.பி : REGRETS.. எதற்காகவாவது ரொம்ப வருத்தப்பட்டதுண்டா?
ரஜினி : நிறைய இருக்கு….
கே.பி : உன்னை பத்தி உன்கிட்டே உனக்கு பிடிச்ச விஷயம் எது ?
ரஜினி : உண்மை பேசுறது (பலத்த கைதட்டல் விசில்)
கே.பி : என்னை பத்தி உனக்கு பிடிக்காத ஒரு விஷயம்?
ரஜினி : நீங்க கோபப்படுறது…
கே.பி : அந்த கோபமெல்லாம் விட்டு ரொம்ப வருஷம் ஆச்சுப்பா நான். இப்போ கொப்படுரதில்லே… நான்.
கே.பி : ஒரே ஒரு கேள்வி கேக்கணும் நான்… கேட்கட்டுமா ?
ரஜினி : கேளுங்க சார்
கே.பி : நீ அரசியலுக்கு வருவியா மாட்டியா?
ரஜினி : (மேலே கையை காண்பித்து) ஆண்டவன் கையில இருக்கு (கைத்தட்டல் விசில்)
கே.பி : நீ தேசிய  விருது வாங்கணும். சிவாஜி கணேசன் வாங்கலே… சிவாஜி ராவ் நீயாவது வாங்குவியா? நீ வாங்கணும்…
ரஜினி : உங்க ஆசீர்வாதத்துல… நிச்சயம் வாங்குவேன் சார்.
கே.பி : உன்கிட்டே நான் இவ்ளோ நேரம் கேட்டுக்கிட்டுருக்கேனே கேள்வி.. என்கிட்டே உனக்கு ஏதாவது கேள்வி கேக்கணுமா?
ரஜினி : எப்போ சார் முடிப்பீங்க…? (வாட்ச்சை பார்த்துக்கொண்டே கேட்கிறார்) (கூட்டத்தில் பயங்கர சிரிப்பொலி)நேரம் அப்போது இரவு   11.00 ஐ தாண்டிவிட்டது…)
கே.பி. : முதல்ல உனக்கு சொன்னேனே விதி அது எனக்கும் பொருந்தும்… நோ கமெண்ட்ஸ்…
கே.பி. – ரஜினி நேர்காணல் தொகுப்பு இனிதே முடிந்தது. விழாவின் மற்ற சுவாரஸ்யமான பகுதிகள் சம்பவங்கள் தனிப்பதிவாக வெளிவரும்.

Source:please visit --  http://onlysuperstar.com/?p=9099

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...

Blog Archive