Tamil Thirukural

Tuesday, November 23, 2010

தமிழ் வளம் சமூக வலைப்பதிவு தளம்

தமிழ் இணைய தள வரலாற்றில் புதிய முயற்சி தமிழ் வளம் .காம் இணையதளம். தமிழ் வளம் இணைய இதழ் உலகத் தமிழர்களுக்காக உருவாக்கப்பட்ட ”சமூக வலைப்பதிவு தளம்”. எட்டுத் திக்கும் உள்ள கலைச் செல்வங்கள் யாவும் தமிழ் மொழியில் கிடைக்கப் பெற வேண்டும் என்ற நோக்கத்துடன் அமைந்துள்ள தமிழ் வளம் இணையத்தில் வெளியிடப்படும் முதல் 100 படைப்புகளை சமர்ப்பிக்கும் 100 பேருக்கு பரிசு மழை! ஆக்கப்பூர்வமான கருத்துப் பரிமாற்றத்திற்கான களம். காஸ் சிலிண்டர் விலையேற்றம் முதல் கல்மாடியின் கள்ளத்தனம் வரை எதைப்பற்றியும் விவாதிக்கலாம். ரசித்த திரைப்படம்,  ருசித்த புத்தகம்,கேட்ட இசை, இதுவரை கேட்கப்படாமல் விட்ட சமூக அவலங்களுக்கான உங்களது கேள்விகளைப் பதிவு செய்யுங்கள். சரியான விமர்சனங்களே சமூகத்தை நெறிப்படுத்தும் பாதுகாவலர்கள். கருத்து சுதந்திரத்திற்கான களமிது!

தன்னம்பிக்கை துளிர் விடும் பளீர் பக்கங்கள்.
நம்மால் மட்டுமே முடியும், நம் வாழ்வும், வளமும் நம் கரங்களில். நிதர்சன நிகழ்வுகள் மற்றும் மனித மேம்பாட்டுக்கான பக்கங்கள்.

வாய்ப்புகளுக்காக வாசல் கதவுகளின் தட்டொலி கேட்டுக் கொண்டிருக்க நாம் தயாரில்லை. தகுதியும் தன்னம்பிக்கையும் வளர்த்துக் கொண்டால் அவை நம் வாசலில் காத்துக் கொண்டிருக்கும் என்ற உண்மையை உணர்ந்தவர்கள் நாம்.

போதி மரத்து புத்தனின் கதையல்ல இது – சாதித்தவர்கள் சந்தித்த போராட்டங்கள், சிந்திய வியர்வைகளின் சரித்திரம்.
புதிய பாதையை உங்கள் நெஞ்சில் பதியம் போட வைக்கும் பக்கங்கள்.

வலை விரித்தோம்! கொள்வார் உண்டு! வெல்வீர் என்றும்.
பாட்டி: தகவல் களஞ்சியம், பழம் பெரும் வைத்தியசாலை
அம்மா: தெய்வம்
சகோதரி: சரி நிகர் சமம்
மனைவி: தெய்வம் தந்த பரிசு
மகள்: பரிசாக வந்த தெய்வம்
மாதவம் புரிந்து மண்ணுதித்த மங்கையர் தம் மகிமை பேசுவோம்- வலைப் பதிவுகள் ஊடே மனையியல், அழகு மற்றும் சமையல் குறிப்புகளுடன் பதிவுகள் பார்க்க, பகிர்ந்து கொள்ள அழைக்கிறோம் அன்புடன்…ஞானத்தீ வளர்க்க வாரீர்… அறிவிளக்கேற்றி, பயயிருள் நீக்குவோம்!
தெரிந்து தெளிவோம் விளையாட்டு முதல் சுற்றுச்சூழல் வரை… அறிந்து ஆள்வோம் அறிவியலையும் மருத்துவத்தையும்…. உணர்ந்து உயர்வோம் வரலாறுகளையும், வாழ்வியலையும்.

விரிந்தன வலைகள் விஞ்ஞானம் தாங்கி,
வானம் கூட எல்லை இல்லை, அதையும் தாண்டி….மாற்றம்” தான் மாறாத விதி அதனால் ”மாத்தி யோசி”. தொழில் நுட்பத்தின் துணையோடு தொட்டது துலங்கும். கணினியைக் கட்டிப் பிடி, மௌஸை மெல்லத் தடவு - உலகம் உன் கைகளில்! வருங்காலத் தொழில் நுட்பமா, மென்பொருள் பற்றியா, இணையதள உலகமா, வலைப்பதிவர்க்குதவும் குறிப்புகளா… தட்டி விடு.
கண்ணா, நாலு லட்டு தின்ன ஆசையா!புறாக்களின் கால்களில் தொடங்கிய பயணம் கடிதங்களகியது பின் காற்றலை ஊடே உலாவி தொலைபேசி துணையோடு செவி வழி நுழைந்தது. இன்றோ நம் உடல் அணுக்களுடன் ‘செல்’லும் செல்லுமிடமெல்லாம் செவிப்பறையாகிறது. தொடர்பில்லாத மனிதன் தொலைந்த மனிதனே! உடல் இயக்கத்திற்கு உணவு போல, உள்ள இயக்கத்திற்கு இலக்கியங்கள், கவிதை, சிறுகதைகள், அன்றாட நிகழ்வுகள், ஆன்மீகம் மற்றும் ஜோதிடம் இவற்றுடன் தொடர்ந்து தொடர்பில் இருங்கள். தொலையாதிருங்கள்!
கனவுகள் நிஜமாகட்டும்!


பகிர்ந்து கொள்ளுங்கள் தமிழ்வளத்தின் பிறப்பை மின்னஞ்சலில்…

சுற்றத்துடனும், நட்புடனும்!

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...