Tamil Thirukural

Monday, December 13, 2010

இந்திய விவசாயம் --backbone of india

Join Only-for-tamil
வளர்ந்து விட்ட

கணிணி உலகத்தில்
சாயம் போகும் விவசாயம்!

ஒடிந்து போன முதுகெலும்பால்
படுத்த படுக்கையாய்
வயல்கள்!

பெருகி வரும் ஆசையால்
சுருங்கி வரும் நிலங்கள்

அடிக் கல்லை வைத்து
அடிக் கணக்கில் விலை பேசி;
மடி நிறையப் பணம் கட்டும்
புது வியாபாரம்!

வாய்க்காலுக்கு வாய் பார்த்து;
நதி நீருக்கு விதி நொந்து;
அறுவடை செய்தாலும்
அடிமாட்டு விலைக்கு!

வளர்ந்து வரும் வேகத்தில்;
பள்ளிப் பாடத்தில் மட்டும் வரும்
பின்னொரு காலத்தில்;
விவசாயம் என்ற தொழில்...

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...