Tamil Thirukural

Wednesday, January 12, 2011

மாயமான 20 லட்சம் கோடி!-india's 20 lakh crore story in tamil

Join Only-for-tamil
அரசியல்வாதிகளில் ஆரம்பித்து சாதாரண மனிதர்கள் வரை சகஜமாக பேசும் ஒரு விஷயமாக ஆகிவிட்டது கறுப்புப் பணம். ஊழல் செய்த பணம், வரி கட்டாமல் ஏமாற்றிய பணம், கமிஷனாக வாங்கிய பணம் என பல வழிகளில் வெள்ளைக் காலர் வில்லன்கள் சம்பாதிக்கும் பணமெல்லாம் கறுப்புப் பணமாகி கடைசியில் வெளிநாட்டு வங்கிகளின் லாக்கர்களை தஞ்சமடைந்து விடுகிறது. இப்படி வெளிநாட்டு வங்கிகளின் லாக்கர்களை நிரப்பிக் கொண்டிருக்கும் கறுப்புப் பணம் எவ்வளவு என்பது இன்னும்கூட தெளிவில்லாமல் இருக்கிறது. சிலர் லட்சம் கோடி என்கிறார்கள். இன்னும் சிலர் 7 லட்சம் கோடி என்கிறார்கள்.

Join Only-for-tamilஇதெல்லாம் உண்மையில்லை. இந்தியா சுதந்திரம் பெற்றது முதல் 2008 வரை இங்கிருந்து வெளிநாட்டுக்குப் போன மொத்தக் கறுப்புப் பணம் 20 லட்சம் கோடி ரூபாய் என்ற அதிர்ச்சித் தகவலை வெளியிட்டு, அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கின்றார் அமெரிக்காவில் வசித்து வரும் இந்தியரான தேவ் கர்.

இவர் ஐ.எம்.எஃப்-ல் மூத்த அதிகாரியாக வேலை பார்த்தவர். உலகப் பொருளாதாரம் பற்றிய பல்வேறு புள்ளி விவரங்களை விரல்நுனியில் வைத்திருப்பவர். அமெரிக்காவில் 'குளோபல் ஃபைனான்ஸியல் இன்டக்ரிட்டி’ என்கிற அமைப்பை இவர் நடத்தி வருகிறார். லாப நோக்கம் இல்லாமல் செயல்படும் இந்த நிறுவனம், கடந்த ஐம்பது ஆண்டுகளில் இந்தியாவிலிருந்து 462 பில்லியன் டாலர் கறுப்புப் பணம் வெளியே போயிருப்பதாகச் சொல்லி இருக்கிறது. பல மாதங்கள் ஆராய்ந்த பிறகே இப்படி ஓர் அதிர்ச்சித் தகவலை வெளியிட்டிருக்கிறதாம் அந்த நிறுவனம்.

அதுமட்டுமல்ல, இந்த இருபது லட்சம் கோடியில் 70 சதவிகித பணம் 2000 முதல் 2008 வரையிலான காலகட்டத்தில் இந்தியாவை விட்டு வெளியே போயிருப்பதாகவும் அந்த ஆய்வு சொல்லி இருக்கிறது.

இந்த கறுப்புப் பணத்தில் பாதி வேண்டாம், கால்வாசிப் பணம் இந்தியாவுக்குத் திரும்ப வந்தாலே போதும்; நமது வெளிநாட்டுக் கடனை ஒரே மூச்சில் கட்டி, கடனே இல்லாத நாடு என்கிற பேரை பெற்றுவிட முடியும். இந்தியாவில் அத்தனை கிராமங்களுக்கும் மின்சார வசதியை யும் ஏற்படுத்திக் கொடுக்க முடியும். நல்ல பள்ளிக்கூடம், சாலைவசதி என மக்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகள் அனைத்தையும் செய்து கொடுக்க முடியும்.  

ஆனால்,சுவிஸ் வங்கிகளில் கிடக்கும்  பணத்தை இந்தியாவுக்கு கொண்டுவரும் வேலையை முடிந்த அளவுக்கு மெதுவாக செய்கின்றனர் அரசியல்வாதிகள்.

வரும் தேர்தலிலாவது மக்கள் இதை ஒரு கோரிக்கையாக வைத்தால்தான் அந்த பணம் நமக்குக் கிடைக்கும்.
Join Only-for-tamil

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...

Blog Archive