Tamil Thirukural

Tuesday, January 25, 2011

நேசம் கவிதை -Beautiful Tamil Love poem

Label: tamil poem,tamil kavithaigal

 
Join Only-for-tamil


எத்தனை  அழுதாலும் தீராத கண்ணீர் போல
என் நேசமும் எத்தனை வெளிப்படுத்தினாலும்
மீண்டும் மீண்டும் சுரக்கும்...!
 
பூமியில் இருந்து நீரைப் பெற்று
பூமிக்கே மழை பொழியும் மேகம் போல
தீண்டாத தூரத்தில் நீ இருந்தாலும்
உன் அன்பை பெற்று நானும் உன்மேல் நேசமழை பொழிவேன்...!
 
சூரியனோடு சேர முடியாவிட்டாலும்
சூரியனின் ஒளி பெற்று ஜொலிக்கும் நிலவை போல
உன்னோடு சேர முடியாவிட்டாலும்
உன் அன்பை பெற்று நான் ஜொலிப்பேன்...!
 
மண்ணுக்குள் வேரை மறைத்து
வெளியே மலர்ந்திருக்கும் மலர்செடியை போல
என் அகத்திலே உன் நேசத்தை மறைத்து
என் முகத்திலே மலர்ந்திருப்பேன்....!
 
தொடுவானாத்தில் இணைந்திருக்கும்
விண்ணும் மண்ணும் போல
நீயும் நானும் கொண்ட நேசம் இணைந்திருக்கும்..!


 

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...

Blog Archive