Tamil Thirukural

Thursday, February 10, 2011

தாய் பற்றிய கவிதை - all about our monther




 
பத்து மாதம் சுமந்து பத்தியம் இருந்து..
உள்ளிருந்து உதைத்த உதைகளை
வெளியில் சொல்லி வெக்கப்பட்டு..
மகிழ்ந்தவளே....மனம் குளிர்ந்தவளே...

கருவறையில் இருந்தபோதே
தலைகோதி விளையாடிய
 தாய் என்ற 
தோழி நீ..


வலிகளை வரமெனப் பொறுத்து
உதைகளைப் பரிசெனப் பகிர்ந்தாயே
காலத்தின் வேகத்தில்
கடவுள் தந்த முதல் தோழியே...
ஊரார் கழுகுக் கண்கள் கொத்திச் செல்லாமல்
உள்ளே அணைத்துக் காத்த தோழியே!

தோள் மீது தூங்கவைத்துத் தோழியாகிறாய்
தஞ்சமெனப் புகும் போது தாயாகிறாய்
கேளாமலேயே வரம் தந்து கடவுளாகிறாய்

மலம் அள்ளி மடி மீது கிடத்தி
மார்பிலே அணைத்த கரங்கள்
முடி கோதி  முகம் துடைத்து 
குளிக்க வைத்த கரங்கள்

வாழ்க்கைப் பாதையில்..
படிக் கல்லாகி படிந்து
ஏற வைத்த‌ ஏற்றி விட்ட‌
நான் ஏறி வந்த படிக் கட்டுகள்!

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...

Blog Archive