Tamil Thirukural

Thursday, February 10, 2011

தண்ணீர் கவிதை - poen about water use





உலகின் எங்கோ ஓர் ஓரத்தில் மௌனமாய்
குனிந்தபடி நடைபோடுகிறேன்
நினைவலைகளில் நீ!
பேரிரைச்சலாய் தங்கு தடையின்றி 
வந்து செல்கிறாய்!

கதைத்த கதைகள்
கவித்துவ மலர்களாய்...
வாசம் வீசியவை..
சுவாசம் இழந்து சுகமின்றி
கிடக்கின்றன..!

இதயத்தில் தடங்களைப்
பதித்துச் சென்ற ரணங்கள்
உன் மென் வருடலுக்காய்
காத்திருக்கின்றன..!

பெருமூச்சுடனும்
பெரும் ஆயாசத்துடன்
நிமிர்ந்து வானம் பார்க்கிறேன்..
சில்லென்று ஒரு துளி - மழைத்துளி
கன்னக் கதுப்போரம் வீழ்கிறது
- உன் கண்ணீரா?

1 comment:

Related Posts Plugin for WordPress, Blogger...

Blog Archive