Tamil Thirukural

Thursday, February 10, 2011

ருசிக்க மிகசிறந்த தமிழ் கவிதைகள் -ultimate tamil poems






 
சன்னல் வழியே வீசும்
சந்தனக் காற்று...
கம்பிகளுக்கிடையே
எனது கண்ணீர்த்துளிகள்!

கீழே விழும் விழிநீரை - என்
விரல் கொண்டு கோடிழுக்க
அனிச்சையாய் உன் பெயரின்
முதல் எழுத்து ......
சலனமற்ற நெஞ்சினிலோ
மலரும் நினைவுகள்...
காயம்பட்ட தழும்புகளாய்...

உருகி உருகி காதல்
செய்தாய்...
உனக்கானவன் நான் தானடி என்று
நாட்டம் கொள்ளச் செய்து
காதலின் சுவையை நாட்களில் எண்ணி
எனை வாட்டமடையச் செய்து
நீ வானம்பாடியாகி விட்டாய்...
நானோ பாவியாகி
பரிதவிக்கின்றேன்...

அன்பினால் எனை ஆட்கொண்டு
நீ ஆட்டம் கண்டாய்!
உன் ஆட்டத்தின் உண்மை நிலை
உணர்ந்தவள் உருக்குலைந்து
நிற்கின்றேன்...!
நீ சொல்லி சென்ற வார்த்தைகள் -
இன்று நீர் மேல் போட்ட மாக்கோலமாய்....

உன்னை பற்றிய நினைவு
வளையங்கள்
எனை சூழ்ந்தபடியே இருப்பதால் -
என் கண்களுக்குக் கீழே
கருவளையங்கள்!

உன் பூ நெஞ்சில் புன்னகை மட்டுமல்ல
முட்களும் நிறைந்திருப்பதை உணர்ந்த
எனது இதயம் நொறுங்கிக் கிடக்கின்றது..!

என் கண்ணில் மையிட்டு அழகு பார்த்தவள்
உன் கண்ணில் பொய் நிறைந்திருப்பதை
அறியத் தவறிய எனது அறியாமையை
என்னவென்பது?

உன் பாதை வழியே பயணித்தவள்
உன் வழித்தடம் காணாமல் தேடுகிறேன்..
மயக்கிப் பேசிய உனது
அலைபேசி கூட இன்று - எனது
தொலைபேசி எண்ணை நீ
தொலைத்தது கண்டு தவிக்கிறது...!

நானும் உன்பால் கொண்ட காதலால்
பெண்ணின் நால்வகையைத்
தொலைத்துவிட்டுத் துடிக்கின்றேன்...
நிஜம் சுட்டதால் நிலையின்றி சாய்கின்றேன்...

காதலுக்கு வழிகாட்டிய நீயே
சாதலுக்கும் வழிகாட்டுகின்றாய்!

அன்பே...!
பன்னீரில் கிடந்தாலும் பட்டமரம் 
ஒருபோதும் துளிர்ப்பதில்லை...
உன் வாழ்வில் வசந்தம் மலர
நீ பெரு வாழ்வு வாழ
வாழ்த்திச் செல்கின்றேன்......

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...

Blog Archive