Tamil Thirukural

Saturday, April 23, 2011

worlds best sayings in tamil



பழமொழிகள்:
 
"பணக்காரனாக ஆவதற்கு பணத்தைச் சேர்த்து வைக்க வேண்டியதில்லை. தேவைகளைக் குறைத்துக் கொண்டாலே போதும். "    -ஸ்பெயின்.
 
"போலியான நண்பனாக இருப்பதைவிட, வெளிப்படையான எதிரியாக இருப்பது மேல்." -இங்கிலாந்து.
 
"தாகத்தால் தவிக்கும் ஒருவனுக்கு ஒரு சொட்டுத் தண்ணீருக்கு முன்னால்  ஓராயிரம் முத்துக்கள் மதிப்புள்ளது ஆகாது." -பாரசீகம்.
 
"செழிப்பானபண்ணையிலிருந்துகுதிரையைவாங்கு:
ஏழை வீட்டிலிருந்து பெண்ணை எடு." -எஸ்டோனியா.                                                                                                                                    
 
"மனிதர்கள் நேசமாயுள்ள இடத்தில் தண்ணீர் கூட இனிப்பாய் இருக்கும்." - சீனா.
 
"நாய் குரைக்கிற போதெல்லாம் நீங்கள் தாமதித்தீர்களேயானால், நீங்கள் செல்ல வேண்டிய இடத்திற்கு செல்லவே முடியாது." - அராபி.
 
"ஒருவன் ஆயிரம் மைல்கள் நடந்தாலும், ஒவ்வொரு அடியாக எடுத்து வைத்துத்தான் அத்தனை மைல்கள் நடக்க முடிந்ததென்பதை மறவாதீர்கள்." - சீனா.
 
"பக்தியோடு பிரார்த்தனை செய். ஆனால் சுத்தியலை பலமாய் அடி." -இங்கிலாந்து.
 
"உன் அண்டை வீட்டுக்காரனை நேசி. ஆனால்   உன் வீட்டு வேலியை எடுத்து விடாதே." -ஜெர்மன்.
 
"ஆசை பேராசையாகவும், அன்பு வெறியாகவும் மாறும் போது அமைதி விலகி எங்கோ போய்விடுகிறது." -ஜப்பான்.  
 

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...

Blog Archive