Tamil Thirukural

Monday, July 25, 2011

தமிழ்மொழியின் "ழ" கரத்தின் சிறப்பு - tamil letter lza stories learn



 
வணக்கம்.

உயர்தனிச் செம்மொழியாம் நம் தமிழ் மொழியின் சிறப்பு உச்சரிப்பு ஆகும்.

நம் இனிய மொழியில் மேலும் சிறப்பு சேர்ப்பது "ழ"கரம் ஆகும்

ஆனால் நம் மக்களில் பெரும்பாலானோர் அதை சரியான முறையில் உச்சரிப்பதில்லை.

ழகரத்தின் சிறப்பை உணர்ந்து கொள்ளுங்கள். சரியான உச்சரிப்பில் நம் தாய் மொழியை பேசுங்கள்.

நமது மொழியின் மெய் எழுத்துகளை மூன்றாக, வல்லினம், மெல்லினம், இடையினம் எனப் பிரித்துள்ளனர் என்பது யாவரும் அறிந்ததே..

க, ச, ட, த, ப, ற என்பனவற்றை வல்லின ஒலிகளாகவும் ங, ஞ, ண, ந, ம, ன ஆகியவற்றை மெல்லின ஒலிகளாகவும், ய, ர, ல, வ, ழ, ள என்பனவற்றை இடையின ஒலிகளாகவும் பிரிக்கின்றனர்.

நம் மொழியில் உள்ள மூவினமான வல்லினம், மெல்லினம், இடையினம் மூன்றும் "தமிழ்" என்பதிலேயே ஒருங்கே இணைந்துள்ளது மேலும் சிறப்பு.

 - வல்லினம்
மி - மெல்லினம்
ழ் - இடையினம்

மேற்பல் வரிசையின் முன்பகுதி உட்புறத்தை (அண்ணம்) நாக்கின் நுனி கொண்டு தொட்டால் (ஒற்றுதல்) தோன்றுவது ஒற்றல் "ல'கரம்.

நாக்கின் நுனியை உள்ளே வளைத்து அண்ணத்தை (மேற்பல் வரிசை உட்புறம்) வருடினால் தோன்றுவது வருடல் "ள'கரம்.

இரு நிலைக்கும் இடையில் நாக்கின் நுனி வளைந்து நின்று தோன்றும் ஒலி "ழ'கரம். இது சிறப்பு ழகரம் என்று சுட்டப்படும்.

இம்மூன்று ஒலிகளையும் வேறுபடுத்திச் சரியாக ஒலித்தால் பொருள் வேறுபடுதலை அறியலாம்.

இது போல் ஒலி வேறுபாட்டை அறிந்து கொள்ளுங்கள்.

நம் குழந்தைகளுக்கும் சரியான உச்சரிப்பை பழக்கி கொடுங்கள்.

நம் தாய் மொழியை சரியான முறையில் பிழை இன்றி பேசுவதும், எழுதுவதும் தான் நமக்கு சிறப்பு என்பதை உணர்ந்து கொள்ளுங்கள்.




ஏதேனும் பிழை இருந்தால் மன்னித்து தெரியப்படுத்தவும்

சாகும்போதும் தமிழ்படித்துச் சாகவேண்டும்
- என்றன் உடல்
சாம்பலும் தமிழ்மணந்து வேகவேண்டும்
பாடையிலே படுத்தூரைச் சுற்றும்போதும்
பைந்தமிழில் அழும் ஓசை கேட்கவேண்டும்
ஓடையிலே என்சாம்பல் ஓடும்போதும்
ஒண்தமிழே சலசலத்து ஓடவேண்டும்


இணையத்தில் சேகரிக்கப்பட்ட தகல்வல்களின் உதவியுடன் நம் தமிழ் தாயகத்திற்காக....

வாழ்த்துக்களுடன்
தமிழச்சி 

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...