Tamil Thirukural

Tuesday, August 9, 2011

ஈரோடு வனப்பகுதியில் 1,250 யானைகள் 18 புலிகள் -Erode forest have 18 tigers and 1250 elephants




ஈரோடு மாவட்ட வனங்களில் 855 ஆக இருந்த யானைகள் எண்ணிக்கை தற்போது 1250 ஆக உயர்ந்துள்ளது. 
‘லிவிங் வித் நேச்சர் குரூப்‘ அமைப்பு சார்பில் வனவிலங்குகள் விழிப்புணர்வு குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கம் ஈரோடு பழையபாளையத்தில் நேற்று நடந்தது. ராமகிருஷ்ணன் தலைமை வகித்தார்.  

நிகழ்ச்சியில் ஈரோடு மண்டல வனப்பாதுகாவலர் அருண் பேசியதாவது: சத்தியமங்கலம் வனத்தை சரணாலயமாக அறிவித்த பிறகு அங்கு யானைகளின் எண்ணிக்கை கணிசமான அளவில் உயர்ந்துள்ளது. கடந்த 2010ம் ஆண்டு வனவிலங்குகள் கணக்கெடுப்பின்படி 785 யானைகள் சத்தியமங்கலம் வனச் சரணாலயத்திலும், 70 யானைகள் ஈரோடு வனக்கோட்டத்திலும் என மொத்தம் 855 காட்டு யானைகள் இருப்பது கண்டறியப்பட்டது. நடப்பு ஆண்டில் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின்படி ஈரோடு மாவட்ட வனப்பகுதியில் 1250 யானைகள் வசிப்பது தெரிய வந்துள்ளது. 

இதேபோன்று 2010ம் ஆண்டு கணக்கெடுப்பின் படி, சத்தியமங்கலம் வனக்கோட்டத்தில் 212 சாம்பார் இன மான்களும், ஈரோடு வனக்கோட்டத்தில் 208 மான்களும் உள்ளன. புள்ளிமான்கள் சத்திமங்கலத்தில் 309ம், ஈரோட்டில் 645ம் உள்ளன. ஈரோடு மாவட்ட வனத்தில் 39 சிறுத்தைகளும், சத்தியமங்கலம் வனப்பகுதியில் 12 புலிகளும் இருப்பதாக கடந்த ஆண்டு எடுக்கப்பட்ட வனவிலங்குகள் கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளன. நடப்பு ஆண்டில் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பு மற்றும் டபிள்யூடபிள்யூஎப்., காமிரா டிராக்கிங் மூலம் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் மூலம் சத்தியமங்கலம் வனப்பகுதியில் புலிகள் எண்ணிக்கை 28 ஆக உயர்ந்துள்ளது என்றார்.

1 comment:

  1. தங்களை தொடர்புகொள்ள மெயில் முகவரி அல்லது தொலைபேசி எண் தேவை பதிவர் தென்றல் இதழுக்காக...thagavalmalar.blogspot.com

    ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...