Tamil Thirukural

Thursday, August 2, 2012

தமிழ் நாட்டை அச்சுறுத்தும் மலையாளிகள் -malayali vs Tamils unknown factsதமிழ் நாட்டை அச்சுறுத்தும் மலையாளிகள் நாடாரை மிரட்டும் மலயாலவியாபாரிகள்


இன்று தமிழகத்தில் அரசியல், சமூக, பொருளியல் நிலைகளில் தமிழர்களை அச்சுறுத்தும் அளவிற்கு மலையாளிகளின் ஆதிக்கம் வளர்ந்துள்ளது.

மணல் கொள்ளை முல்லைப் பெரியாறு:
முல்லைப் பெரியாறு அனிச் சிக்கலில் தொடர்ந்து நமக்கு தொல்லைகள் கொடுத்து வரும் மலையாளிகள் உச்ச நீதிமன்றத் தீர்ப்பினையும் மதிக்காமல் புதிய அணைகட்ட தீர்மானித்துள்ளனர்.

புதிய ஆணை கட்டப்படுமானால் முல்லைப் பெரியாறு அணையில் தமிழகத்திற்குள்ள 999 ஆண்டு ஒப்பந்தம் செல்லாததாகிவிடும். இந்த உண்மை கேரள அரசுக்கும், தமிழக அரசின் தலைமைப் பொறுப்பில் உள்ளவர்களுக்கும், மன்மோகன் சிங், சோனியாவிற்கும் நன்றாகத் தெரியும்.

ஆனால் பாதிப்பைக் கண்டு பதைபதைக்க வேண்டிய முன்னாள் முதல்வர் கருணாநிதி கடிதம் எழுதிக் காலம் கழித்துக் கொண்டிருந்தார். புதிய அணைக்கட்ட தமிழக ஆறுகளிலிருந்து நாற்பதாயிரத்திலிருந்து அறுபதாயிரம் யூனிட் அளவு மணல் கொள்ளையடிக்கப்பட்டு கேரள வனப் பகுதியில் குவிக்கப்பட்டு வருகின்றது .(ஒரு லாரியில் ஒன்றரை யூனிட் மணல் நிரப்பலாம்))

நிலம் கைப்பற்றுதல்:

தமிழக கேரள எல்லை மாவட்டங்களான நீலமலை, கோவை, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், நெல்லை, குமரி என ஏழு மாவட்டங்களின் எல்லைப் பகுதியிலிருந்து தமிழகத்தினுள் நூறு கி.மீ. அளவிற்கு உள்ளே நுழைந்து நிலங்களை வாங்கியுள்ளனர் மலையாளிகள். வளைகுடா நாடுகளில் பெரும்பணம் சம்பாதிக்கும் மலையாளிகள் முதலீடு என்ற பெயரில் தமிழ்நாட்டில் நிலங்களை வளைத்துப்போட்டு வருகிறார்கள். தமிழ்நாட்டுத் தமிழர்களைவிட அதிகவிலை கொடுத்து மலையாளிகள் நிலங்களை வாங்குவதால் தமிழர்கள் மலையாளிகளிடம் நிலத்தை விற்றுவிட்டு வெளியேறுகின்றனர்.

தமிழ்நாட்டில் உள்ள மொத்த நிலப்பரப்பில் இன்று 8இல் 1 பகுதி மலையாளிகளின் கையில் உள்ளதை நாம் நினைவில் கொள்ள வேண்டும். எல்லையோர மாவட்டங்களில் மட்டுமல்லாது தமிழ்நாட்டில் பல இடங்களிலும் இடத்தை வளைத்துப் போடுவதில் குறியாக இருக்கின்றனர். நீலமலை, நெல்லை மாவட்டங்களில் உள்ள தமிழக வனத்துறைக்குச் சொந்தமான மரங்களை வெட்டி கப்பல் மூலம் சப்பான், கொரியா போன்ற நாடுகளுக்குக் கடத்தும் தொழிலையும் பகிரங்கமாகச் செய்து வாருகிறார்கள்.

நகை வணிகம்:

ஐம்பது, அறுபது ஆண்டுகளாக தமிழ்நாட்டில் மார்வாடிகள் நகை வணிகம், வட்டிக் கடை நடத்தி வந்தாலும் ஒரே பெயரில் தமிழ்நாடு முழுவதும் கடைகள் திறந்து கிளை பரப்பவில்லை.

ஆனால் தமிழ்நாட்டில் ஐந்தாறு ஆண்டுகளுக்கு முன்பு நகை வணிகத்தில் நுழைந்த மலையாளிகள் இன்று ஜோஸ் ஆலூக்காஸ், ஜோய் ஆலூக்காஸ், மனப்புரம் கோல்டு ஹௌஸ் என நூற்றுக்கணக்கான கிளைகளைப் பரப்பிவிட்டார்கள். இந்த நகைக்கடைகளில் கண்ணாடிக் கதவை திறந்து விடுபவன் தொடங்கி கல்லாப் பெட்டியில் இருப்பவன் வரை மலையாளிகளே.

நகைக்கடை என்றால் 10 அல்லது 15 அளவில் கடைகள் என்று நினைத்து விட வவேண்டாம். ஐந்தடுக்கு மாடிகள், நூற்றுக்கணக்கான மலையாள ஊழியர்கள், குளிரூட்டப்பட்ட அறைகள் என விரிந்து கிடக்கின்றன. மார்வாடிகளால் தமிழர்களின் நகைத்தொழில் நசிந்து நூற்றுக்கணக்கான தொழிலாளர்கள் சயனைட் அருந்தி தற்கொலை செய்து கொண்ட சோக வரலாற்று நிகழ்வின் வலி ஆறும் முன்பே மலையாளிகளின் ஆதிக்கத்தால் தமிழக நகை வணிகர்களும் தொழிலாளர்களும் நடுத்தெருவிற்கு வரவேண்டிய சூழலுக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.

இதில் வேதனையும் வேடிக்கையும் என்னவென்றால் அண்மையில் ஜோஸ் ஆலுக்காசின் கிளைத் திறப்புவிழா கடலூரில் நடந்தது. கடையைத் திறந்து வைத்தவர் யார் தெரியுமா? தமிழக மக்கள் நல வாழ்வுத் துறை அமைச்சராயிருந்த எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம். தமிழர்களின் நகரமான பெங்களூரில் அண்மையில் திறந்தவர் நடிகர் விசய். மலையாளிகள் நம்மீது ஆதிக்கம் செலுத்தும் கமுக்கம் தெரிகிறதா?

வியாபாரம்

தமிழ் நாட்டில் வியாபாரத்துக்கு செட்டியார்க்கு அடுத்தபடியாக நாடார்கள் சிறு வியாபாரங்கள் முதல் பல பெரிய வியாபாரங்கள் வரை நாடார்கள் மிகசிறந்து விலங்குகிறார்கள் ஆனால் இப்போ அது தலைகீழாக மாறிக்கொண்டுவருகிறது இப்போ மலையாளிகள் வியாபாரத்தில் கவர்ச்சியை காட்டி அரேபியா பணத்தை கொட்டி வியாபாரம் பண்ணுகிறான் வியாபாரத்தில் தமிழர்களை அடிமையாக்கி நாடார்களை மிரட்டுகிறான் மலையாளி

முத்தூட் பைனான்ஸ்:

மலையாளிகளால் சில ஆண்டுகளுக்கு முன் சென்னை, மதுரை போன்ற மாநகரங்களில் மட்டும் முத்தூட் பைனான்ஸ் தொடங்கப்பட்டது.

பிறகு குறைவான வட்டி, நகைக் கிராமிற்கு அதிக பணம், நாள் கணக்கில் மட்டுமே கணக்கிடப்படும் வட்டித்தொகை என தமிழக மக்களிடம் கவர்ச்சி காட்டி நகராட்சி தகுதியுள்ள தமிழக நகரங்களில் தமது வட்டிக்கடையை விரிவாக்கம் செய்த முத்தூட் பைனான்ஸ் நிறுவனத்தினர் இன்று ஐந்தாயிரம், பத்தாயிரம் மக்கள் தொகை கொண்ட சிற்றூர் பகுதிகளில் கூட தனது கிளையைத் தொடங்கி வட்டிக்கடை என்ற பெயரில் தமிழர்களின் சொத்துக்களை ஏமாற்றி பறித்துக் கொள்கிறார்கள் என்பதுதான் உண்மை.

ஆயிரத்திற்கும் மேற்பட்ட முத்தூட் பைனான்ஸ் கிளைகள் தமிழகத்தில் வேர்பிடித்து வளர்ந்து வரும் பேராபத்தை புரியாமல் மலையாளிகளிடம் நகைகளை அடகு வைத்து மனை வாங்கும் தமிழர்கள் பின் வீட்டை விற்று வட்டி கட்டி நடுத்தெருவிற்கு வருகிறார்கள்.

கட்டுமானத் தொழிலிலும் கைவரிசை:

அரை கிரவுண்ட், ஒரு கிரவுண்ட் அளவில் வீடு கட்டிக் கொடுப்பதை நாம் பெருமையாக பீற்றிக் கொள்கிறோம். ஆனால் தமிழ்நாட்டில் இன்று பெருமளவில் மதிப்பிடக்கூடிய கட்டிடங்களைக் கட்டும் தொழில் மலையாளிகளின் கைகளில் சிக்கியுள்ளன. தமிழகக் கிழக்குக் கடற்கரைச் சாலையிலுள்ள ஏக்கர் கணக்கிலான பெரிய பெரிய பங்களாக்கள், மாளிகைகளை தமிழ்நாட்டில் எழுப்பிக் கொண்டிருக்கும் பென்னிகுரியாகோஸ் என்ற மலையாளியின் கையில்தான் இன்று கட்டுமானத்துறை உள்ளது.

தமிழகத்திலுள்ள பாரம்பரியமான செட்டி நாடு வீடுகளை எல்லாம் வாஸ்து சரியல்ல என்று இடித்து, அதில் உள்ள பொருட்களை எல்லாம் கொள்ளையடித்து தமிழகக் கட்டிடக் கலைகளைச் சிதைத்து மலையாள கட்டிடக் கலைகளைப் புகுத்திக் கொண்டிருக்கிறார் பென்னி குரியகோஸ்.

இவரது ஆண்டு வருமானம் 500 கோடியைத் தாண்டும் என்கிறார்கள் விவரம் அறிந்தவர்கள். இதே போல் ஆண்டுக்கு பலநூறு கோடிகளை ஊதியமாக (இலாபமாக) ஈட்டும் எம்.ஆர்.எப் டயர் நிறுவனமும் மலையாளிகளிகளுடையதுதான்.

பண்பாட்டுப் படையெடுப்பு:

தமிழகத்தில் மார்வாடிகளின் ஹோலிப் பண்டிகையைவிட இன்று பிரபலமாகிக் கொண்டிருக்கின்றது மலையாளிகளின் பண்டிகையான ஓணம்.

தெலுங்கு வருடப் பிறப்பிற்கு விடுமுறை விட்டு அண்டை மாநிலத்துடன் நட்பை வளர்ப்பதுபோல் கேரளத்துடனும் நட்போடு இருக்க வேண்டாமா? இதற்காக தமிழக முதல்வர் கடந்த ஆண்டு தமிழகத்தில் ஓணம் திருவிழாவிற்காக மதுரை, நெல்லை, சென்னை, கோவை, திருப்பூர், ஈரோடு, திருச்சி, நாகர்கோவில், குமரி என பதினைந்திற்கும் மேற்பட்ட நகரங்களுக்கு ஒரு நாள் உள்ளூர் விடுமுறை அறிவித்தார்.

இதைச் சரியாகப் பயன்படுத்திக் கொண்ட மலையாளிகள் தமிழகப் பள்ளி கல்லூரிகளில் மலையாளப் பண்பாட்டின் பெருமைகளையும், உள்ளூர் தொலைக்காட்சிகளை ஒரு நாள் குத்தகைக்கு எடுத்து ஓணம் பண்டிகையின் சிறப்பையும் பரப்புகிறார்கள். இதேபோல கதகளிக்கும் தமிழகத்தில் அண்மைக் காலமாக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு வருகிறது.

விளம்பரப் படங்களில்கூட கதகளி இடம் பெரும் அளவிற்கு இன்று நம்மிடையே மலயாளப் பண்பாட்டுப் படையெடுப்பு நிகழ்ந்து வருகின்றது.

செண்டா மேளம் :

மாவீரன் முத்துக்குமார் தீக்குளித்து மாண்ட நாளில் மதுரையில் மு.க. அழகிரி தனது பிறந்த நாளை கிடாவும், கேக்கும் வெட்டிக் கொண்டாடினார் என்பது தெரிந்த கதைதான்.

மேலும் அன்றையச் சிறப்பாக கேரளத்திலிருந்து செண்டா மேளக் குழுவினர் வரவழைக்கப்பட்டு ஆட்டம் பாட்டம் போட்டு ஆனந்தத்தில் மூழ்கித் திளைத்தார்கள்.

கேரளத்தில் மட்டுமே பிரபலமடைந்திருந்த செண்டா மேளத்தை தமிழகத்திற்கு அழைத்து வந்து அறிமுகப் படுத்தியது மு.க. அழகிரிதான். இன்று மேல்தட்டு வர்க்கத்தினர் மற்றும் அரசியல் பிரமுகர்களின் இல்ல விழாக்களில் செண்டா மேளக் குழுவினர் தவறாமல் இடம் பெறுகிறார்கள் என்றால் அதற்கு மு.க. அழகிரியே முழுமுதல் காரணமாவார்.

ஐயப்பன் கோவிலுக்குச் செல்பவர்கள் கண்ணிபூசை நடத்தும் போதுகூட இன்று செண்டா மேளம் இடம் பிடித்துக் கொள்ளும் அளவிற்கு முக்கியத்துவம் பெற்று வருகின்றது. மாநில, மாவட்ட அளவில் நடைபெறும் அரசு விழாக்களில்கூட செண்டா மேள இசை நிகழ்ச்சி நடைபெறுகிறது.

இதன் உச்சகட்டமாக திமுக அரசு நடத்திய செம்மொழி மாநாட்டிலும் செண்டா மேளக் கச்சேரி இடம் பெற்றது. செம்மொழி மாநாட்டுப் பாடலை இயக்கியவரும், பாடியவர்களில் பெரும்பாலானோரும் மலையாளிகளே.

வந்தேரிகளைத் தூக்கி வைத்துக் கொண்டாடுவதில் தமிழர்களுக்கு நிகர் எவருமில்லை என்பதைத் தெரிந்து கொண்ட கேரள அரசு செண்டா மேளத்திற்கென பள்ளி கல்லூரிகளில் சிறப்பு வகுப்புகள் தொடங்கி இசைப்பயிற்சி முடித்தவர்களுக்கு சான்றளித்து, அவர்களைத் தமிழகத்திற்கு அனுப்பி வைக்கும் திட்டத்தைச் செயல்படுத்தி வருகிறது.

முன்பெல்லாம் கேரளத்திலிருந்து செண்டா மேளக் குழுவினர் வந்து போனார்கள். தற்போது தமிழ்நாட்டிலேயே தங்கிவிட்டார்கள். இதனால் நமது பாரம்பரிய இசைக் கலைஞர்களின் வாழ்வில் இருள் சூழும் நிலை தோன்றியுள்ளது.

சூழல் கேடுகள்:

தமிழ்நாட்டிலிருந்து மலையாளிகளுக்கு அரிசி, பருப்பு, பால், காய்கறி முதலான அத்தியாவசிய பொருட்களும், ஆடு, மாடு, கோழி, மீன் போன்ற இறைச்சி வகைகளும் செல்கின்றன. இதில் கோழியின் கழிவுப் பொருட்களையும், பிளாஸ்டிக் போன்ற திடக்கழிவுகளையும் மருந்துக் கழிவுகளையும் தமிழக எல்லையில் மலையாளிகள் கொட்டிச் செல்வது வாடிக்கையாகிவிட்டது.

அவ்வப்போது உள்ளூர் மக்கள் எதிர்ப்புத் தெரிவிப்பது பத்திரிகையில் செய்தியாக வெளிவந்தாலும் தடுக்க வேண்டிய தமிழக அரசு கைகட்டி வேடிக்கை பார்க்கிறது.

கோவை மாவட்டத்தில் கடலூர், போல்ல்லாச்சி, நடுப்பணி, கிணத்துக்கடவு, வளந்தாயமரம், கோபாலபுரம், செமணாம் பதி, மூணாறு போன்ற இடங்களில் கடந்த பல ஆண்டுகளாக கேரளக் கழிவுகள் கொட்டப்படுகின்றன.

தமிழக எல்லைகளில் சோதனைச் சாவடிகள் இருந்தும் அதிகாரிகளின் மெத்தனத்தால் மலையாளிகள் தமிழகப் பகுதிகளில் கழிவுகளை கொட்டிச் செல்கிறார்கள்.

கடந்த 09 -07 -2010 அன்று பொள்ளாச்சியில் மருத்துவக் கழிவைக் கொட்டவந்த கேரள லாரியைத் தடுத்து நிறுத்திய பெரியார் திராவிடர் கழக பொள்ளாச்சி வட்டச் செயலாளர் கைது செய்யப்பட்டார். கைது செய்தது கேரள காவல்துறையோ என்று அவசரப்பட்டு விடாதீர்கள். நம் தமிழக காவல்துறைதான். பின்னே அண்டை மாநில உறவை வலுப்படுத்த வேண்டாமா?

அரசியல் ஆதிக்கம்:

மத்திய அமைச்சரவையில் மகனுக்கும் பேரனுக்கும் வருமானம் வரும் துறையாக கேட்டுப் பெற்ற கலைஞரைவிடக் கேரளத்தவர்கள் வித்தியாசமானவர்கள்.

நாட்டின் பாதுகாப்புத்துறை அமைச்சராக இருப்பவர ஏ.கே. அந்தோணி, வெளிநாடுவாழ் இந்தியர் நலத்துறை அமைச்சராக இருப்பவர் வயலார் ரவி, குடியேற்றத்துறை அமைச்சராக இருப்பவர் ஈ.அகமது எனத் தம் மாநில மக்களின் நலம் காக்கும் துறைகளைக் கேரளத்தவர்கள் பெற்றுள்ளார்கள்.

இந்தியாவில் உள்ள தேசிய இனங்களில் தமிழர்கள்தான் அதிக நாடுகளில் பரவி வாழ்கிறார்கள். கருணாநிதி என்ன செய்திருக்க வேண்டும்: வயலார் ரவி, அகமது போன்றோர் வகிக்கும் துறைகளை மத்திய அரசிடம் கேட்டுப் பெற்றிருக்க வேண்டும். அப்படி பெறாததற்குக் காரணம் அந்தத் துறைகளில் அதிகம் சுருட்ட முடியாது என்பதுதான். ஆனால் மலையாளிகளின் கணக்கு வேறு. இந்தத் துறைகளின் மூலம் தமது இனத்திற்கு எந்தவகையான பாதுகாப்பை வெளிநாட்டிலும், உள்நாட்டிலும் உத்திரவாதப்படுத்தலாம், பொருளாதாரத்தைப் பெருக்கலாம் என்று எண்ணி செயல்படுகிறார்கள்.

முல்லைப் பெரியாறு பாசன விவசாய சங்கத் தலைவர் திரு.அப்பாஸ் அவர்கள் தகவல் பெரும் உரிமைச் சட்டத்தின் மூலம் பெற்ற தகவல் அதிர்ச்சி அளிப்பதாக இருக்கிறது. பிரதமர் அலுவலகத்தில் குரூப்-௧ தேர்வெழுதி தேர்ச்சி பெற்று தற்போது பணிபுரிபவர்கள் 57 பேர். இதில் மலையாளிகள் மட்டும் 37 பேர். இதுமட்டுமல்ல வெளியுறவுத்துறை செயலாளராக இருந்த நிருபமா ராவ், பாதுகாப்பு ஆலோசகரான சிவசங்கர் மேனன் மற்றும் எம்.கே.நாராயணன் (தற்போது மேற்கு வாங்க ஆளுநர்), பிரதமரின் ஆலோசகர் ஜோஷி, சோனியாவின் உச்சபட்ச ஆலோசகரான ஜார்ஜ், உள்துறைச் செயலாளர் கே.கி.பிள்ளை ஆகிய அனைவருமே மலையாளிகள் ஆவர். இந்தியாவில் மட்டுமல்லாது இந்தியாவிற்கான ஐ.நா. சிறப்புத் தூதுவராக கோபிநாத் அச்சங்குளங்கரே என்ற மலையாளியும், ஐ.நா. பொதுச்செயலாளர் பான் கி மூனின் தனிச்செயலாளராக விஜய் நம்பியார் என்ற மலையாளியும் உள்ளனர். விஜய் நம்பியாரின் தமிபி மேஜர் ஜெனரல் சதீஷ் நம்பியார் இலங்கை ராணுவத்தினருக்கு சிறப்புப் பயிற்சி அளிக்கும் பொறுப்பில் இருக்கிறார்.

நிர்வாகத்தின் கீழிலிருந்து மேலடுக்கு வரை எல்லாப் பொறுப்புகளிலும் மலையாளிகளின் ஆதிக்கம் நிறைந்து காணப்படுகிறது.

உண்மையில் மத்தியில் நடப்பது மன்மோகன் சோனியா ஆட்சி என்பதைவிட மலையாளிகளின் ஆட்சி என்பதுதான் பொருத்தமானதாகும். இவர்களின் சூழ்ச்சியால்தான் ஈழத்தில் நம் உறவுகள் 1 லட்சம் பேர் கொல்லப்பட்டனர். குறிப்பாக இந்திய, அரசை ஆட்டிப்படைக்கும் அரசியல் சக்தியாக மலையாளிகள் திகழ்கிறார்கள் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

கேரளத்தில் தமிழர்களின் நிலை:

தமிழ்நாட்டில் வசதி வாய்ப்புகளோடும், அரசியல் செல்வாக்கூடும் வாழும் மலையாளிகள் போல் கேரளத்தில் நம் தமிழர்கள் வாழ்கிறார்களா?

கடந்த ஆண்டு தமிழகத்தில் ஓணம் பண்டிகைக்கு உள்ளூர் விடுமுறை விட்டதுபோல் இந்த ஆண்டு பொங்கல் பண்டிகைக்காக திருவனந்தபுரம் நகரத்திற்கு மட்டும் ஒரு நாள் விடுப்பு கேட்டு கேரளா அரசிடம் திருவனந்தபுரத் தமிழர்கள் விண்ணப்பித்தார்கள்.

ஆனால் விடுமுறை கிடையாது என்று கேரளா அரசு அறிவித்தது. இதைக் கண்டித்து அங்குள்ள தமிழர்கள் கேரளத் தலைமைச் செயலகத்தின் முன் பொங்கல் வைக்கும் போராட்டத்தினை நடத்தி சிறை சென்றார்கள்.

தேனி மாவட்டத்தைச் சேர்ந்த தமிழர்கள் ஒரு காலத்தில் கேரளாவில் பெரும் ஏலக்காய் எஸ்டேட் முதலாளிகளாக இருந்தவர்கள். இவர்களின் கதை பெரும் துயரம் நிறைந்தது. கேரளாவில் காங்கிரஸ் ஆட்சியானாலும், கம்யூனிஸ்ட் ஆட்சியானாலும் இலக்கை ஈஸ்டேட்டிற்குச் சென்று ஒரு குறுக்கத்திற்கு ஐம்பதாயிரம், ஒரு லட்சம் என்று மிரட்டி பணம் பறித்தார்கள். மலையாளிகளுக்கு அதிகக்கூலி கொடுத்து கட்டுப் படியாகாததால் விவசாய வேலைக்கு தமிழ்நாட்டிலிருந்து சென்றவர்களை அடித்து விரட்டினார்கள்.

பிறகு முழுக்க முழுக்க மலையாளிகளையே வேலைக்குச் சேர்க்க வேண்டும் என்று மிரட்டினார்கள். இதனால் வந்த விலைக்கு நிலத்தை விற்று விட்டு மீண்டும் தமிழகத்திற்கே வந்து காலம் கழிக்கிறார்கள் நம் தமிழர்கள். மலையாளிகள் எந்த அளவிற்கு விழிப்புடனும் ஒரு கட்டுக்கோப்புடனும் திகழ்கிறார்கள் என்பதற்கு மேற்சொன்ன நிகழ்வுகள் எல்லாம் சின்னச் சின்ன எடுத்துக்காட்டுகள்தான்.

இதையெல்லாம் தடுத்து நிறுத்த ஒரு தற்காப்புப் போருக்காவது தமிழர்கள் தயாராக வேண்டாமா?

அரசியல் சட்டம் வகுக்கப்பட்ட காலத்திலேயே காஷ்மீர் மற்றும் வடகிழக்கு மாநிலங்களுக்கு சிறப்புச் சட்டப்பிரிவான 370 கொண்டு வரப்பட்டது. அதன்படி காஷ்மீரில் பிரமாநிலங்களைச் சேர்ந்தவர்கள் அசையும் மற்றும் அசையாச் சொத்துக்களை வாங்க முடியாது.

அவரவர் தாய்மொழியில் வரவு செலவு கணக்கெழுதிக் கொள்ளலாம் என்ற சிறப்பு விதியும் வகுக்கப்பட்டது. இதன்படி இன்று தமிழ்நாட்டில் தொழில் நிறுவனங்கள் கடைகள் நடத்தி வரும் மார்வாடி, குஜராத்தி, மலையாளிகள் அவர்களின் தாய்மொழியிலேயே வரவு செலவுக் கணக்கு எழுதுவதால் நமது வருமான மற்றும் விற்பனை வரித்துறை அதிகாரிகளுக்கு குழப்பம் ஏற்படுகிறது.

இதைத் தங்களுக்கு சாதகமாக்கிக் கொண்ட வந்தேர்கள் விற்பனை வருமான வரித்துறையினரை ஏமாற்றி வருகின்றனர். அல்லது கையூட்டு (லஞ்சம்) கொடுத்து சரிகட்டுகின்றனர்.

இப்படி பிற மொழியினரின் பொருளாதார ஆதிக்கம் தமிழ் மண்ணில் வேர்பிடித்து நிற்பதை பிடுங்கி எறிய வேண்டுமானால் மொழிவழி மாநிலம் பிரிக்கப்பட்ட 1956க்குப் பிறகு தமிழ்நாட்டில் குடியேறி சொத்து வாங்கியவர்களின் சொத்துக்கள் செல்லாது என்று சட்டம் இயற்ற வேண்டும்.

தமிழ்நாட்டில் இந்தத் துணிச்சலான செயலைச் செய்ய முதுகெலும்புள்ள ஒரு முதலமைச்சரால் மட்டுமே முடியும்.

ஆசியாவில் சீனர்கள் வலிமை பெற்று திகழ்வதைப் போல இந்தியாவில் இன்று வலுவுள்ள இனக்குழுவாக மலையாள இனம் திகழ்கிறது. மலையாளிகளின் ஆதிக்கப் போக்கு தொடருமேயானால் விரைவில் தமிழகம் கேரளமயமாகிவிடும்.

தமிழர்கள் பொருளாதார அடிமைகளாய் இடம் பெயரக்கூடிய அபாயம் ஏற்படும். அல்லது யூதர்களிடம் நிலத்தைப் பரி கொடுத்துவிட்டு போராடிக் கொண்டிருக்கும் அராபிய இனத்தைப் போல தமிழினம் தள்ளப்பட்டுவிடும்.

6 comments:

 1. vandhari ellam vazhavitha thamizhagam eppo thamakkan urimaiyai thedukirathu. we tamil peoples have been vindicated continually by our own politicians in connivance with other state politicians , for their family sake , instead of our states sake.

  ReplyDelete
 2. Veliya adichu thorathidalam kavalaya vidunga

  ReplyDelete
  Replies
  1. nadakkathu boss tamil nadu name change panna poranga oru nall

   Delete
 3. Namma seeman solrathu thaan sari
  vantharai vala vaippom aanal engal thamilarai matume aala vaippom

  ReplyDelete
 4. Ippothellam ... after gulf life..whats your plan ? endru kettal...Immediate reply is that.My plan is to start a loan business ...daily interest... meter vatti... installment business... endru adukku kiraargal. Thamilanai Andavan than kaappatranum.

  WHITE COLLAR JOB MATTUMEY SEIVARGALAAM...THAMIL MAKKAL NALLA ADIMAIGALAM!

  Nam Ministergal veru athai nirubikkiraargal!

  ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...