Tamil Thirukural

Monday, November 26, 2012

தியாகச்சுடர் காமராசர்தியாகச்சுடர் காமராசர்
காமராசர் இறந்தபோது அவர் வீட்டில் (சென்னையில்) இருந்த மொத்த பணம் வெறும் 67 ரூபாய் மட்டுமே. காமராசர் பல வங்கிகளில் பணம் போட்டு வைத்திருக்க

ிறார் என்று பலர் மேடைகளில் பேசியதுண்டு, எழுதிய துண்டு. அது பொய் என்று நிரூபித்தது இந்த 67 ரூபாய்.


ஒருமுறை முதல்-அமைச்சர் காமராசர் ரெயிலில் பகல் வேளையில் திருநெல்வேலிக்குப் பயணமானார். விருதுநகர் ரெயில் நிலையத்தில் வண்டி நின்றபோது நிறைய பிரமுகர்கள் காமராசரை சந்தித்தனர். காமராசரோ வண்டியில் இருந்து இறங்கவே இல்லை. ரயில் பெட்டியின் வாசலில் நின்று அவர்களின் வரவேற்பைப் பெற்றுக் கொண்டார். வண்டி நகரும் முன் ஒரு தொண்டர் காமராசரிடம் ஐயா அதோ அம்மா நிக்காங்க என்று காட்ட காமராசர் ஏறிட்டுப் பார்த்தார். கூட்டத்துக்கு அப்பால் அவரது தாயார் நின்று கொண்டு மகனைப் பார்த்து மகிழ்ந்து கொண்டிருந்தார். வண்டி நகரத் தொடங்கியது காமராசர் ரெயில் பெட்டியின் வாசலில் நின்று கொண்டிருந்தார். பெட்டியின் வாசல் அவரது தாயாருக்கு நேர் எதிரே வந்த போது, “சௌக்கியமா அம்மா'’ என்று காமராசர் கேட்டார். தாயாரின் முகம் மேலும் மலர்ந்தது. வண்டி மேலும் நகர்ந்தது. தனது தாயார் தன்னைக் காணவேண்டும் என்பதற்காக தனது முழு உருவமும் வெளியே தெரியும்படி காமராசர் ரெயில் பெட்டி வாசலில் நின்று கொண்டே இருந்தார். ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டே இருக்க ரெயில் தெற்கு நோக்கி வேகம் எடுத்தது.


முதல்-அமைச்சர் பதவியை விட்டு விலகி, அகில இந்திய காங்கிரஸ் தலைவராகி, 1967 தேர்தலில் காமராசர் விருதுநகரிலேயே தோற்கடிக்கப்பட்டார். அதன்பின் நாகர்கோவில் பாராளுமன்ற உறுப்பினரானார். அப்போது சென்னையில் இருந்த காமராசருக்கு, சிவகாமி அம்மையாருக்கு உடல் நலமில்லை என்று சேதி சொன்னார்கள். உடனே புறப்பட்டு விருதுநகர் வந்தார். மதுரை நெடுமாறன் பெருந் தலைவருடன் வந்தார், தாயாரைக் கண்டார். மகனைக் கண்டவுடன் அந்த தாயின் உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டது.எனவே காமராசர் சென்னைக்குத் திரும்ப முடிவு செய்தார். தாயாரிடம் சொன்னார். போயிட்டு வாப்பா. ஆனால் நம் வீட்டில் சாப்பிட்டு விட்டுப் போ என்றார், அந்த தாயார் படுக்கையில் படுத்தபடி. சரி சொன்ன காமராசர் அன்று தன் வீட்டில் சாப்பிட்டார். தாயாருக்கு அது பரம திருப்தி. தாயிடம் விடை பெற்ற பின் சென்னைக்கு புறப்பட்டார். உடன் பயணம் செய்த நெடுமாறன் “நீங்கள் வீட்டில் சாப்பிட்டு எவ்வளவு காலம் ஆயிற்று?'’ என்று கேட்டார். சற்றே கண்ணை மூடிக்கணக்கு போட்ட காமராசர் நான் என் வீட்டில் சாப்பிட்டு 25 வருஷமாவது இருக்கும் என்றார்.


1937_ல் சட்டசபை தேர்தல் நடந்தது. விருதுநகரை உள்ளடக்கிய சாத்தூர் தொகுதியில் காமராஜர் வெற்றி பெற்றார். காமராஜரை சாரட்டு வண்டி யில் ஊர்வலமாக அழைத்துச் சென்றனர். அப்போது, அக்கினித் திராவகம் நிரப்பப்பட்ட மின்சார பல்புகள் அவரை நோக்கி வீசப்பட்டன. நல்லவேளையாக அவை காமராஜர் மீது படாமல் குதிரைகளுக்கு முன்னால் விழுந்து உடைந்து சிதறின.இதனால் மிரண்டு ஓடிய குதிரைகளை, அருகில் இருந்தவர்கள் அடக்கினார்கள்.பச்சைத் தமிழர் ஆட்சியில்


1956_ல் தொடங்கப்பட்ட மதிய உணவுத் திட்டத்தின் மூலம் 29,017 பள்ளிகளில் மதிய உணவு அளிக்கப்பட்டது. 15 லட்சம் மாணவர்கள் பயன் அடைந்தார்கள். பள்ளிச் சீரமைப்பு மாநாடுகள் நடத்தி, அதன் மூலம் ரூ.6 கோடி வசூலிக்கப்பட்டது. இந்த பணத்தைக் கொண்டு, மாணவர்களுக்கு கரும்பலகை, சீருடை ஆகியவை வழங்கப்பட்டன. மதிய உணவு திட்டத்துடன் காமராஜர் நிற்கவில்லை. கிராமம் தோறும் பள்ளிகள் தொடங்கினார். பள்ளிக்கூடம் இல்லாத ஊரே இல்லை என்ற நிலைமை ஏற்பட்டது. 1954_ல் இருந்த தொடக்கப்பள்ளிகள் எண்ணிக்கை 21 ஆயிரம். இது 1962_ல் 30 ஆயிரமாக உயர்ந்தது. மாணவர்கள் எண்ணிக்கை 29 லட்சத்தில் இருந்து 42 லட்சமாக உயர்ந்தது. இதேபோல் 1954_ல் இருந்த உயர்நிலைப்பள்ளிகள் 2,012. இது 1964_ல் 2,163 ஆக உயர்ந்தது. மாணவர்கள் எண்ணிக்கை 4 லட்சத்து 98 ஆயிரத்தில் இருந்து 10 லட்சத்து 98 ஆயிரமாக அதிகரித்தது. எஸ்.எஸ்.எல்.சி. வரை இலவச கல்வித் திட்டத்தை 1960_ல் காமராஜர் கொண்டு வந்தார். ஆண்டு ஒன்றுக்கு ரூ.1,200_க்கு குறைவாக வரு மானம் உள்ள குடும்பத்தின் மாணவனுக்கு இலவச கல்வி அளிக்கப்பட்டது. இந்த வருமான உச்ச வரம்பு பின்னர் ரூ.1,500 ஆக உயர்த்தப் பட்டது. 1962_ம் ஆண்டில், “வரு மான உச்ச வரம்பு இன்றி எல்லோருக்கும் இலவச கல்வி” என்று காமராஜர் அறிவித்தார். 1963_ம் ஆண்டு, அரசாங்கத்தின் ஒரு ஆண்டு மொத்த செலவே ரூ.127 கோடியே 19 லட்சம்தான். அதில் கல்விக்கு ரூ.27 கோடியே 58 லட்சம் ஒதுக்கப் பட்டது.


“வடக்கு வாழ்கிறது! தெற்கு தேய்கிறது” என்று தி.மு.கழகத்தினர் பிரசாரம் செய்தனர். இது, மக்களின் மனதில் ஆழப் பதிந்தது. தி.மு.கழகத்தின் வளர்ச்சிக்கு இதுவும் ஒரு காரணம். தி.மு.க. கூறுவதில் உண்மை இருப்பதை காமராஜரும் உணர்ந்துகொண்டார். எனவே, தமிழ்நாட்டில் பெரிய தொழிற் சாலைகளையும், அணைகளையும் அமைக்க வேண்டும் என்று முடிவு எடுத்தார். மத்திய அரசிடம் வற்புறுத்தி, ஐந்தாண்டு திட்டங்களில் தமிழ் நாட்டுக்கு கணிசமான தொகை ஒதுக்கும்படி செய்தார்.


சென்னை பெரம்பூரில், சுவிட்சர்லாந்து நாட்டு உதவியுடன் ரெயில் பெட்டி தொழிற்சாலை ரூ.12 கோடி செலவில் தொடங்கப்பட் டது. இந்த தொழிற்சாலை மூலம் 10 ஆயிரம் பேருக்கு வேலை கிடைத்தது.


நீலகிரியில் ரூ.11 கோடி மதிப்பில் பிலிம் தொழிற்சாலை தொடங்கப்பட்டது. இந்த தொழிற்சாலைக்கான தொழில் நுட்ப உதவியை பிரான்சு வழங்கியது. சென்னை கிண்டியில் இந்துஸ்தான் டெலிபிரிண்டர் தொழிற்சாலை அமைக்கப்பட்டது.


தென்ஆற்காடு மாவட்டம் நெய்வேலியில் பழுப்பு நிலக்கரி கிடைக்கும் என்று கண்டறியப்பட்டதும், 1956_ல் ரூ.160 கோடி மதிப்பீட்டில் நெய்வேலி நிலக்கரி கார்ப்ப ரேஷன் அமைக்கப்பட்டது. முதல் கட்டமாக அங்கு 250 மெகாவாட் உற்பத்தி திறன் கொண்ட அனல் மின் சக்தி நிலையம் அமைக்கப்பட்டது.


துப்பாக்கி தயாரிக்கும் தொழிற்சாலை திருச்சியில் அமைக்கப்பட்டது.


சென்னை கிண்டி, மதுரை, விருதுநகர், திருச்சி உள்பட 9 நகரங்களில் தொழிற்பேட்டைகள் அமைக்கப்பட்டன. மூன்றாவது ஐந் தாண்டு திட்டத்தில் மேலும் 13 தொழிற்பேட்டைகளை அமைக்க அரசு முடிவு செய்தது.


அம்பத்தூரில் 1,200 ஏக்கர் நிலத்தில் பெரிய தொழிற்பேட்டை அமைக்கப்பட்டது. பெரிய, நடுத்தர, சிறிய தொழிற்சாலைகள் இங்கு அமைக்கப்பட்டன. இதேபோன்ற தொழிற் பேட்டை, ராணிப்பேட்டையிலும் அமைக்கப் பட்டது.


கீழ் பவானித்திட்டம், மேட்டூர் கால்வாய்த் திட்டம், காவேரி டெல்டா வடிகால் அபிவிருத்தி திட்டம், மணிமுத்தாறு, அமராவதி, வைகை, சாத்தனூர், கிருஷ்ணகிரி, ஆரணியாறு ஆகிய 9 பெரும் நீர் பாசன அணைத் திட்டங்கள்


அகண்ட காவிரியின் வலக்கரையில் கட்டளைக்கரை ரெகுலேட்டருக்கு சற்று மேலாக புதிய கட்டளை உயர் மட்ட கால்வாய் அமைத்தார்.


காவேரியின் இடைக்கரையில் ஸ்ரீரங்கத்தின் தொடக்கத்தில் மேல் அணைக்கட்டுக்கு மேல் புள்ளம்பாடி கால்வாய் வெட்டப்பட்டது.


தென்னார்க்காடு மாவட்டம் வடூரின் அருகே வரகத்தின் குறுக்கே அணை கட்டினார்.


கன்னியாகுமரி மாவட்டத்தில் நெய்யாறு திட்டம்


கோவையில் பரம்பிக்குளம் _ ஆழியாறு திட்டம்.


தமிழகத்தில் ஆயிரத்து 600 ஏரிகள் அபிவிருத்தி செய்யப்பட்டன.


சென்னை ஆவடியில் ராணுவ டாங்கி தொழிற் சாலை அமைக்கப்பட்டது. அறுவை சிகிச்சைக் கருவிகள் தயாரிக்கும் தொழிற்சாலை ரஷிய உதவியுடன் அமைக்கப் பட்டது.


பாரத்ஹெவி எலக்ரிக்கல்ஸ்


சிமெண்ட் தொழிற்சாலைகள்.


மேட்டூர் காகித தொழிற்சாலை.


கிண்டியில் உள்ள தொழிற்பண்ணை


சென்னைக்கு அருகே ஸ்டாண்டர்டு மோட்டார் கம்பெனி.


சென்னைக்கு அருகே ராயல் என்பீல்டு மோட்டார் சைக்கிள் தொழிற்சாலை.


மேட்டுப்பாளையத்தில் அமைக்கப்பட்டுள்ள ரயான் செயற்கைப்பட்டு தொழிற்சாலை.


அம்பத்தூரில் உள்ள டன்லப் ரப்பர் கம்பெனி.


தென் ஆற்காடு மாவட்டம் புகளூர், மதுரை பாண்டிராஜபுரம், தஞ்சை வடபாதி மங்கலம், திருச்சி பெட்டவாய்த்தலை, கோவை உடுமலைப்பேட்டை, வட ஆற்காடு ஆம்பூர்,


செங்கல்பட்டு படாளம் ஆகிய ஊர்களில் சர்க்கரை ஆலைகள் தோற்றுவிக்கப்பட்டன.


15 ஆயிரத்து 303 ஆரம்பப் பள்ளிகளை தமிழகத்தில் 26 ஆயிரத்து 700 ஆரம்ப பள்ளிகளாக உயர்த்தினார்.


18 லட்சம் சிறுவர்கள் படித்ததை 34 லட்சம் சிறுவர்கள் படிக்கும் நிலைக்கு தமிழகத்தை உயர்த்தி காட்டினார்.


471 உயர் நிலைப்பள்ளிகளாக இருந்ததை ஆயிரத்து 361 உயர் நிலைப்பள்ளிகளாக கொண்டு வந்தார்.


தமிழகத்தில் 28 கல்லூரிகள் என்று இருந்ததை 50 கல்லூரிகளாக உயர்த்தினார்.


6 பயிற்சி கல்லூரிகளை 17 பயிற்சி கல்லூரிகளாக மாற்றினார்.


தமிழகத்தில் 19 மாதிரி தொழில் பள்ளிகள், 6 செய்முறை தொழிற்பயிற்சி நிலையங்கள், 19 பொது வசதி பட்டறைகள் 5 சமூக நல நிலையங்கள்


இவை போக ஏராளமான சிறு, குறு தொழிற்சாலைகள் தமிழகத்தின் வீதிகளில் தொடங்கப்பட்டன. பெரியார் சொன்னதுபோல் மூவேந்தர் ஆட்சி காலத்திலும் இல்லாத பொற்கால ஆட்சி காமராஜர் ஆட்சி காலத்தில் தான் இருந்ததுதேர்தலில் தோற்றபிறகு சேலத்தில் காங்கிரஸ் கட்சியின் செயற்குழு கூட்டம் நடந்தது. அப்போது எல்லோரும், மத்தியிலும், மாநிலத்திலும் காங்கிரஸ் அரசுகள் இல்லை என்று யாருடனாவது கூட்டு சேரவேண்டும் என்று பேசினார்கள். அப்போது காமராஜருக்கு கோபம் வந்தது. ஏல, போறவனெல்லாம் போங்க! என்னை ஆளை விடுங்க யார் வேணுமானாலும் எங்கேயும் போய் சேருங்க என்று கோபமாக பேசினார். பெருந் தலைவர் ஆத்திரப்பட்டு பேசி விட்டதால் எல்லோரும் வெளியே போயிருவாங்க என்று நினைத்தார்கள் . சுமார் 15 நிமிடம் அமைதி நிலவியது.திடீரென பெருந் தலைவரே பேச ஆரம்பித்தார். நான் எதுக்கு சொல்றேன் தெரியுமா! என்றார். அவரை யாரும் பேச விடல்லை. 10 பேர் எழுந்து தேம்பி, தேம்பி அழுதனர். அதில் பணக்காரர்கள், முன்னாள் அமைச்சர்கள் எல்லாம் உண்டு.அவர்கள் எங்களுக்கு பதவி வேண்டாம் ஒன்றும் வேண்டாம் உங்களை விட்டு போக மாட்டோம். தப்பா பேசினால் மன்னியுங்கள் என்று சொன்னதும் கூட்டமே அழுதது.
சென்ற இரண்டாயிரம் ஆண்டுகளாகத் தமிழகத்தில் ஏற்படாத மறுமலர்ச்சியும் விழிப்பும் இப்போது ஏற்பட்டுள்ளன. இதற்கு காரணம் நமது காமராசர்தான். ஊர்தோறும் சாரம் தொழில்வளம் ஏற்பட்டுள்ளன. மூவேந்தர் காலத்தில் கூட நிகழாத இந்த அதிசயத்தை சாதித்த நமது காமராசரின் அறிவுத்திறனை மறுக்க முடியுமா?" என்றார் அறிவாசான் பெரியார்.

1 comment:

  1. முதல் திருமணத்தை மறைத்து இரண்டாவதாக என்னை ஏமாற்றி திருமணம் செய்த திண்டுக்கல்மாவப்டம் வடமதுரை EB காலனி ரோடு மகாத்மா நகர் என்ற முகவரியை சேர்ந்த இரா.பஞ்சவர்ணம் . க.பெ.ராமசாமி Late POSTAL ASSISTANT (POST OFFICE BPM) ஆகியோரின் மகளும் வடமதுரை அருகே உள்ள சித்தூர் ஆதிதிராவிடர் காலனியில் வசித்து வரும் கால்நடைகளுக்கு சினை ஊசி போடூம் தொழில் செய்து வரும் கண்ணன் என்பவரின் தங்கை இரா.ரெங்கநாயகி என்பவள் மீது வழக்கு பதிவு செய்து உள்ளனர melum 3 VATHU THIRUMANAMSEIUM NOKATHIL MUYARSI SEIKINDRNAR EN KULANTHAIYIN ETHIR KALAM KELVI KURIYAKIVIDUM akaveseithi veliyittu uhavumaru kettu kolkiren

    ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...