Tamil Thirukural

Tuesday, February 19, 2013

காமராஜரை பற்றி கருணாநிதி அவர்களின் அரசியல் நாகரிகம் -kalaignarabout kamarajar unknown facts
கருணாநிதி அவர்களின் அரசியல் நாகரிகம் (காமராஜரை பற்றி)


விருதுபட்டியில், கருவாட்டு வியாபாரம் செய்த, கருவாட்டுக்காரி சிவகாமியின் சீமந்த புத்திரன் தான், இந்த காமராஜன்' என்று, ஒன்பது ஆண்டு, பொற்கால ஆட்சி தந்த காமராஜரை அவமானபடுத்தி ஒருமையில் அர்ச்சித்தார், அரசியல் நாகரிகமற்ற கருணாநிதி.

*"துறவியாகிவிட்ட பட்டினத்தடிகளை, அவர் தாய் துறந்து விட்டதை போல், நானும் என் மகனை இந்த நாட்டுக்காக, துறந்து விட்டு நிற்கிறேன்' என்று, மூத்த எழுத்தாளர் சாவியிடம், கண்கலங்கி கதறி அழுதிருக்கிறார், காமராஜரின் தாய் சிவகாமி. அந்த புண்ணியவதியைத் தான், "கருவாட்டுக்காரி' என்று, கரித்துக் கொட்டினார், கருணாநிதி.தன் வாழ்வை, 4,000 நாட்களுக்கு மேல், கொடுஞ்சிறையில் கழித்ததாலும், குடும்பம், குழந்தை, குட்டிகள் என்றிருந்தால், பரிசுத்தமாக மக்கள் பணியாற்ற முடியாது என்றும், தன் தாய் எவ்வளவோ வேண்டியும், "திருமணம் வேண்டாம்' என்று, மக்கள் தலைவராக திகழ்ந்தார், காமராஜர். அதற்கு, "காமராஜருக்கு யாரும் பெண் கொடுக்க முன்வரவில்லை' என, "நாகரிகத்தோடு' நல்கினார் கருணாநிதி.

*"காமராஜர் என்ன மெத்த படித்தவரா? முன்பெல்லாம் ரஷ்யாவிற்கு எருமை தோலை தான், இந்தியா ஏற்றுமதி செய்தது. இன்று, எருமையையே அனுப்பியுள்ளது' என, காமராஜர், ரஷ்யா சென்றதை பொறுத்துக் கொள்ள முடியாமல், பொறாமைப்பட்டு பேசினார் கருணாநிதி.


*"ஐதராபாத் ஸ்டேட் பாங்கிலும், சுவிஸ் வங்கியிலும், பல கோடி ரூபாய், டெபாசிட் போட்டுள்ளார் காமராஜர்' என, அரசியல், "பண்பாட்டோடு'ம் பறைசாற்றினார் கருணாநிதி.அதற்கு, "அந்த கணக்கோட செக் புக்கை, கருணாநிதி கொண்டு வந்தால், கையெழுத்து போட்டு தருகிறேன்; அவரே எல்லா பணத்தையும் எடுத்துக் கொள்ளட்டும்' என, நாகரிகத்தோடும், பண்பாட்டோடும் பதிலளித்தார், காலாகாந்தி.இதில் வேடிக்கை என்னவென்றால், காமராஜர் கண் மூடிய போது, அவர் ஜிப்பாவில் வெறும், 100 ரூபாயும், தேனாம்பேட்டை ஸ்டேட் பாங்கில், இரு மாத எம்.பி., சம்பளம், 10 ஆயிரம் ரூபாய் மட்டுமே இருந்தது. 

இந்த வேதனையிலும், வேடிக்கை என்னவென்றால் பேங்க் பாஸ்புக்கும், செக் புக்கும், சத்தியமூர்த்தி பவனில் தான் இருந்தன.இன்று, "கடந்த கால ஆட்சியின் போது, சுவிஸ் வங்கியில் கணக்கை அதிகரிப்பதில் தான், கருணாநிதி கவனம் செலுத்தினார்' என்று, கடந்த வாரம், சட்டசபையில் கருணாநிதி மீது கடுங்குற்றஞ்சாட்டினார், விராலிமலை எம்.எல்.ஏ., விஜயபாஸ்கர்.முத்தாய்ப்பாக, "அண்டங்காக்கா, எருமை தோலர், காண்டாமிருகத் தோலர், பனை ஏறி, மரமேறி, நாடான், சாணான், நனைச்ச பனை, கட்டைப்பீடி காமராஜர், கோமாளி ராஜா, அறிவிலி, அலி வெறுந் தலைவன்' என்று, ஒரிஜினல் தென்னாட்டு காந்தியை, 1 சதவீதம் கூட, அரசியல் நாகரிகமோ, பண்பாடோ இல்லாமல், வாய்க்கு வந்தபடி வசைபாடினார் கருணாநிதி.

இந்த லட்சணத்தில், "இன்று அரசியல் பண்பாடும் இல்லை, நாகரிகமும் இல்லை' என, நாக்கிலே வெல்லமாக பேசும் இவரது பேச்சை நம்பிக் கொண்டிருக்க, தமிழக மக்கள் தயாராக இல்லை என்பதை, இவர், எப்போது உணரப் போகிறார்?

3 comments:

  1. karunanithi pondra kayavargalai konda thrudar iyakkangalaiyum, thamil thurogigalaiyum amozan kattukku nadu kadithivittaal tamilnadu uruppadum.

    ReplyDelete
  2. Kudumba arasiyal nadathum karunathi ellam ore thalaivana?????ithai eppoluthu than Tamil nadu makkal ariyapogirargalo????

    ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...